என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • கோவிலில் முதல் முறையாக வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.

    கோவிலில் முதல் முறையாக வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.

    விழா வில் லட்சக்கணக்கான பக் தர்கள் கூடுவர் என எதிர் பார்க்கப்படுகிறது.விழாவின் ஒரு பகுதி யாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.

    புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலையை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலையுடன் இணைப்ப தற்கான இடத்தையும், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள சங் கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை அமைப்பதற் கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது, பொதுப் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் மண வாளன், உதவி பொறியா ளர் கோபி, அமைச்சரின் தனிச்செயலர் மனோகரன், காசிவிஸ்வநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • சிவா எம்,எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்,எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். சன்.சண்முகம் முன்னிலை வகித்தார். ராஜாராமன், ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ரமேஷ், குமணன், வீரசெல்வம், ராஜவேலு, சுரேஷ், அருள், செல்வம், அருள்மொழிவர்மன், அமர், தமிழ்நிலவன், பிரசாத், சிவா, செந்தில், கோவில்பிள்ளை, விமல் மற்றும் பல திமுக கலந்து கொண்டுடனர்.

    பின்னர் சன். சண்முகம் ஏற்பாட்டில் சிவா எம்,எல்.ஏ. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    • பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த வாலிபர் இறந்து போனார்.
    • முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த வாலிபர் இறந்து போனார்.

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது27). பெயிண்டர். இவருக்கும் பூமியான்பேட்டை பாவணன்நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இரு தரப்பினரும் பிரச்சினை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முருகன் போன் செய்து பாலாஜியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு பாலாஜி பதில் அளிக்கும் வகையில் முருகனின் மனைவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

    அப்போது முருகன் தைரியம் இருந்தால் நான் இருக்கும் இடத்துக்கு வா என்று அழைத்தார். அதற்கு சவால் விடுக்கும் வகையில் பாலாஜி நான் வந்தால் என்ன செய்ய முடியும்? சற்று நேரத்தில் நீ இருக்கும் இடத்தில் வருகிறேன் என்று கூறி தனது நண்பர்களான வேலா, சண்முகம் உள்பட 6 பேருடன் பூமியான் பேட்டைக்கு சென்றார்.

    அப்போது தயாராக இருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான அப்பாஸ், கார்த்திக், ஐஸ் சதீஸ், குரு, சுந்தர் ஆகியோர் பாலாஜியையும், அவரது தரப்பை சேர்ந்தவர்களையும் இரும்பு பைப், பீர் பாட்டில் , தடி மற்றும் கல்லால் தாக்கினர். இதனை எதிர்பார்க்காத பாலாஜி தரப்பினர் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஓட ஓட விரட்டி பாலாஜி தரப்பினரை சரமாரியாக தாக்கினர். இதில் பாலாஜி, வேலா, சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்

    இதில் வேலா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி தரப்பினரை தாக்கிய முருகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலா

    சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து ரெட்டியார்பாளையம் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார்.
    • இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார். மேட்டுப்பாளையம் அருகே கல்மேடுபேட் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது40). இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    சுகுமார் கல்மேடுபேட் பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் கழிவறையில் தங்கி விடுவார். அவருக்கு அவரது மனைவி அருணாதேவி சாப்பாடு கொடுத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் அருணாதேவி கணவருக்கு சாப்பாடு கொடுக்க கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு சுகுமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சுகுமார் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாட்டின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • புதுவை மக்களின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் வெகுமக்களின் நலன் காப்பதிலும் உறுதுணையாக இருப்பார்.அவருக்கு எனது சார்பிலும் புதுவை மக்களின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ரங்கசாமி கூறியுள்ளார்.

    அமைச்சர் லட்சுமிநா ராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்ய சபாவின் பதவிக்காலத் தலைவராகவும் இருக்கும் உங்கள் சகாப்தம் நமது ஜனநாயகத்தை புதிய பாதையில் கொண்டு செல்லும் . எம்.பி.யாகவும், பிற அரசியல் சட்டப் பதவிகளிலும் உங்களின் செழுமையான அனுபவம் இந்த நாட்டு மக்களின் இதயங்களை வெல்ல உதவும்.

    புதுவை மக்கள் மற்றும் எனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.
    • உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது. இது குறித்து உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவயிடத்திற்கு உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர்கள் ரவிக்குமார்,ஆரோக்கியம், மேஸ்திரி கொலோவிஸ் ஆகியோர் துப்புரவு பணியாளர்ளுடன் வந்து வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்தனர்.

    இதில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசீர், அவுட் ரவி, கணேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி நடந்த பிரம்மாண்ட மாநில அளவிலான மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர்.
    • இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த பிரம்மாண்ட மாநில அளவிலான மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர்.

    இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த 75-வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் 3 நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில் புதுவையில் வீடு தோரும் தேசிய கொடியினை பறக்க விட பா.ஜனதாவினர் பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஓர் அங்கமாக செல்வகணபதி எம்.பி. ஏற்பாட்டில், சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி புதுவை கடற்கரை காந்தி சிலையில் இன்று அதிகாலை தொடங்கியது.

    மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.‌ஜெ .சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்தனர்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஐந்து கிலோமீட்டர் தூரம் புல்வார் பகுதியை சுற்றிலும், 17 வயது உடையவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் எட்டு கிலோமீட்டர் தூரம் அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர், பாலாஜி தியேட்டர் நெல்லிதோப்பு சிக்னல், கம்பன் கலையரங்க வழியாக மீண்டும் கடற்கரை சாலையை வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 3000-திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் ஓடினர். மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர்கள், காவல்துறையினர் ஒருங்கி ணைப்பு செய்திருந்தனர்.

    • புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் வரவேற்று பேசினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இளநிலை மருத்துவ மாணவ-மாணவிகள் 300 பேரும், முதுநிலை மருத்துவ மாணவ-மாணவிகள் 91 பேரும் பட்டங்களை பெற்றனர். மேலும் சிறப்பாக படித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

    விழாவில் அவர் பேசும் போது மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இப்போது பல்வேறு பெரிய நிறுவனங்களில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த கல்வி குழுமத்தினர் தங்களது மேன்மையான செயல்திறனை நிரூபித்துள்ளனர் என்றார்.

    கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் தனது வரவேற்புரையில், புதுவை பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு கல்லூரி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும், நல்ல நிர்வாகமும் தான் காரணம். நாட்டிற்கு நல்ல மருத்துவர்களை இக்கல்லூரி உருவாக்கி வருகிறது. அ த ற் கு ஏற்றவாறு கட்டமைப்பு வசதி, புற மற்றும் உள் நோயாளிகள் இருப்பது காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

    பட்டமளிப்பு விழாவில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், துணை இயக்குனர் மற்றும் டீன் காக்னே ராஜேந்திரகுமார், அகாடமிக் டீன் கார்த்திகே யன், டீன் (ஆய்வு) கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • மின்விளக்குகள் மற்றும் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தவளக்குப்பம் ஆனந்தா நகர் பகுதியில் தொகுதி எம்.எல்,ஏ. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆனந்த நகர் பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை, தெரு மின்விளக்குகள் மற்றும் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஆனந்தா நகர் பகுதியில் மக்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பகுதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் இந்த பகுதியில் அனைத்து சாலைகளையும் கழிவு நீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலையாக அமைத்து தருவதோடு அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தார்.

    இந்த கூட்டத்தில் அப்பகுதி குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 100-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை. இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாலிபர்கள் யார்? என மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் வெளிமாநிலத்தவரை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்தான், கஞ்சா புகைத்துவிட்டு அப்பகுதியில் பலரையும் தாக்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.
    • ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.

    இன்று தொடங்கியது. இந்த ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் ஆயர் இராயப்பன் திருப்பலி நிறைவேற்றினார்.

    தொடர்ந்து மாதாவின் கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் அருட்தந்தை யர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நவநாட்களான 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் சிறப்பு மறையுரை, சிறிய தேர்பவனி நடக்கிறது.

    ஆடம்பர தேர் பவனி  விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டு பெருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அன்னையின் திருத்தேர் மந்திரிக்கப்பட்டு வீதிகளில் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி தந்தை ஆன்டோ மரியசூசை தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.

    புதுச்சேரி, ஆக.6-

    இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.

    காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வெங்கடா நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும்-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    ஓவியப் போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பா.ஜனதா துணைத் தலைவர் ரவிச்சந்திரன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர், வர்த்தக பிரிவு மாநில இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், காமராஜ் நகர் தொகுதி மகளிர் அணி தலைவி தனலட்சுமி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×