என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் அரியாங்குப்பம் வட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியாங்குப்பத்தில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் அரியாங்குப்பம் வட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியாங்குப்பத்தில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி முன்னிலை வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாக்கியவதி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் சத்துணவுகள் குறித்த உணவு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    • உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    • நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அதிகாரிகளிடம் இப்பணிகளை 4 மாதத்திற்குள் முடித்து கொடுக்கும்படி கென்னடி எம்.எல்.ஏ. அறியுறுத்தினர். 

    • கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது.
    • அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 இடங்களை விபத்து அதிக விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கடலூர்-புதுவை ரோடு அரியாங்குப்பம், நோணாங்குப்பம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம் - புதுநகர் கன்னியாகோயில்- முள்ளோடை ஆகிய இடங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

    புதுவை அரசு தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித் துறைக்கு கடலூர்- புதுவை சாலையை இரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யாமல், நிதி காரணம் என அதிகாரிகள் பொதுமக்களிடம், சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படும் பகுதியை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு கட்டை மற்றும் இருவழி சாலைக்கு நடு கட்டைகள் அமைத்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக இடையார்பாளை யத்திலிருந்து - தவளக்கு ப்பம் வரை விபத்து அதிகரித்து வந்ததால் தன்னார்வு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 300 மீட்டருக்கு இருவழிச் சாலைக்கான நடுகட்டைகள் அமைத்துள்ளனர்.

    மேலும் விபத்தை குறைக்க பல்வேறு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்டத்தை மீறாமல் ஹெல்மெட் அணிதல், செல்போன் பேசுவதை தவிர்த்தல், அதிக பாரத்துடன் செல்வதை தவிர்த்தல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவரது சட்டை பையில் 5 கிராம் கொண்ட சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர். மொத்தம் 20 பாக்கெட் கஞ்சாவை அந்த வாலிபர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரண்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    • உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
    • மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ் மருத்துவ கல்லூரி செவிலியர் மற்றும் மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.கார்கில் நினைவிடத்தில் இருந்து தலைமை செயலகம் வழியாக காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி துணை முதல்வர் ஸ்டாலின் சமுதாய மருத்துவர் வேலவன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் பீட்டர் பிரஷாந்த் நன்றி கூறினார். 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

    • டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    அரிசி, பால், தயிர் போன்ற உணவு பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஏமாற்றம் என மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    இதற்காக மிஷன் வீதி மாதா கோவிலில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    ஊர்வலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், கார்த்திகேயன், அனந்தராமன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, கலைவாணன், சடகோபன், வக்கீல் சாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆம்பூர் சாலைக்கு வந்தனர். அங்கு போலீசார் பேரிகார்டுகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

    அங்கு போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளின் மீது ஏறி தடையை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் கைது செய்யப்பட்டார்.

    • சென்னை நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • கண்டமங்கலம் பழைய போலீஸ் நிலையம் எதிரேசாலையை கடந்து செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    புதுச்சேரி:

    சென்னை நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் பழைய போலீஸ் நிலையம் எதிரேசாலையை கடந்து செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    ஒருபுறம் சாலை பணி நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் ஒரு வழி பாதையாக சிறிய வழித்தடமாக அமைக்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியாக அதிகமாக வாகனங்கள் சென்று வருவதால் குடிநீர் குழாய் சுமார் 2 அடி ஆழத்தில் செல்வதால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

    நேற்று 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்ட பகுதியை சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் மூலம் சரி செய்யப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் வாகனங்கள் சேறு மற்றும் சகதியில் சிக்கிக் கொண்டு விபத்தும் ஏற்படுகிறது.

    மீண்டும் உடைப்பு ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோரிமேடு அருகே சரியாக வேலை கிடைக்காத விரக்தியில் தச்சுத் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • புதுவை கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல்

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே சரியாக வேலை கிடைக்காத விரக்தியில் தச்சுத் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 41) தச்சுத் தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஞானவேலுக்கு சரியான தச்சுத் தொழில் கிடைக்க வில்லை. இதனால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார்.

    இது பற்றி தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.அவருக்கு மனைவி மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் ஞானவேல் வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்து இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஞானவேல் சம்பவத்தன்று எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானவேல் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது சகோதரர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் காஞ்சனா வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்திலன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தனசேகரன் வழிகாட்டுதல் பேரிலும், மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலர் டாக்டர் நாராயணசாமி ஆகியோரின் வாழ்த்துக்களுடன் நடைபெற்றது. இந்த விழாவில் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் காஞ்சனா வரவேற்புரையாற்றினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் மலர்க்கண் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் தட்ஷிண மூர்த்தி, துறைத் தலைவர்கள் ஜெயகாந்தன், பத்மநாபன், சுரேஷ்குமார், ஜெகதீசன், பேராசியரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்த ஆண்டு அரசு வாரியத் தேர்வில் மின்னியல் துறையை சார்ந்த சபரீஷ் 700-க்கு 696 மதிப்பெண் பெற்றும், மெக்கானிக்கல் துறையை சார்ந்த கிருஷ்ணா என்ற மாணவர் 700-க்கு 694 மதிப்பெண் பெற்றும், கம்ப்யூட்டர் துறையை சார்ந்த விக்னேஷ் 700-க்கு 692, மெக்கானிக்கல் துறையை சார்ந்த விஷால் 700-க்கு 691 மதிப்பெண் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்தனர். அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டர். நிகழ்ச்சியின் முடிவில் மின்னியல் துறைத்தலைவா ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டப்பாக்கம், மடுகரை, கரியமாணிக்கம், கரையாம்புத்தூர், கல்மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானமும் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், அந்தந்த கிராம பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.
    • வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.

    வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.

    விழாவில் முதல் அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 50 மாணவர்களுக்கு லேப்-டாப், 300 மகளிருக்கு புடவையும் வழங்கினார். விழாவில் ராஜ்பவன் முன்னாள் கவுன்சிலர் குமரன், குணா, ராஜ்பவன் தொகுதி வட்டார தலைவர் கோபிநாத், ராம், மலர்மன்னன், ஸ்ரீகாந்த், ராமதாஸ், ஆனந்த், பாபு, சுந்தர்பால், வினோத், சங்கர், முரளி, சக்திவேல், சுரேஷ், ஒயிட்டவுன் சங்கர், பார்த்திபன்,புகழேந்தி, மகளிர் அணியை சேர்ந்த கலைச்செல்வி, பத்மலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காலை 11 மணி முதல் 1 மணி வரை 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 84 ஆயிரம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் புனரமைப்பு மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
    • அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து ெதாடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 84 ஆயிரம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் புனரமைப்பு மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது. இப்பணியினை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×