என் மலர்
புதுச்சேரி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சண்முகம் தலைமையில் காரைக்கால் பகுதி நெடுங்காடு மனோன்மணி அம்மன் கோவில், பூவம் ஸ்ரீதளாதேவி கோவில், திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- ரங்கசாமி பிறந்தநாளில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தங்க நாணயங்கள் வழங்கினார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சண்முகம் தலைமையில் காரைக்கால் பகுதி நெடுங்காடு மனோன்மணி அம்மன் கோவில், பூவம் ஸ்ரீதளாதேவி கோவில், திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் காரைக்கால், திருப்பட்டினம், நெடுங்காடு பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெடுங்காடு தொகுதி குரும்பகரம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடை ந்தனர். கோட்டுச்சேரி, ராயன்பாளையம், பூவம் அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் ரங்கசாமி பிறந்தநாளில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தங்க நாணயங்கள் வழங்கினார்.
நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து கேக் வெட்டி விமர்சையாக ரங்கசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- வாலிபர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுவை அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது27). பெயிண்டர். இவருக்கும் பூமியான்பேட்டை பாவணன்நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இரு தரப்பினரும் பிரச்சினை செய்து வந்தனர்.
இந்தநிலையில் முருகன் போன் செய்து பாலாஜியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு பாலாஜி பதில் அளிக்கும் வகையில் முருகனின் மனைவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
அப்போது முருகன் தைரியம் இருந்தால் நான் இருக்கும் இடத்துக்கு வா என்று அழைத்தார். அதற்கு சவால் விடுக்கும் வகையில் பாலாஜி நான் வந்தால் என்ன செய்ய முடியும்? சற்று நேரத்தில் நீ இருக்கும் இடத்தில் வருகிறேன் என்று கூறி தனது நண்பர்களான வேலா, சண்முகம் உள்பட 6 பேருடன் பூமியான்பேட்டைக்கு சென்றார்.
அப்போது தயாராக இருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான அப்பாஸ், கார்த்திக், ஐஸ் சதீஸ், குரு, சுந்தர் ஆகியோர் பாலாஜியையும், அவரது தரப்பை சேர்ந்தவர்களையும் இரும்பு பைப், பீர் பாட்டில் , தடி மற்றும் கல்லால் தாக்கினர். இதனை எதிர்பார்க்காத பாலாஜி தரப்பினர் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஓட ஓட விரட்டி பாலாஜி தரப்பினரை சரமாரியாக தாக்கினர். இதில் பாலாஜி, வேலா, சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் வேலா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த புதிய ஆராய்ச்சி திட்டத்தை துணைவேந்தர் குர்மீத்சிங் தொடங்கி வைத்தார்.
- விளைவுகள், குறைக்குள் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்
புதுச்சேரி:
புதுவை பல்கலைக் கழகத்தில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த புதிய ஆராய்ச்சி திட்டத்தை துணைவேந்தர் குர்மீத்சிங் தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள், விளைவுகள், குறைக்குள் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அமெரிக்காவின் டைவர்ஜென்ட் பாத்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற பேராசிரியர் அப்பாசி, புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தஸ்னீம் அப்பாசி ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.
- மலேசியா நாட்டில் மேலகாவில் 19-வது உலக கோப்பை பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது,
- புதுவையை சேர்ந்த சாந்திலட்சுமி பங்கேற்றார்
புதுச்சேரி:
மலேசியா நாட்டில் மேலகாவில் 19-வது உலக கோப்பை பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் புதுவையை சேர்ந்த சாந்திலட்சுமி பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கும், புதுவை மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
- பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்.
- தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி, முதல் -அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாளையொட்டி ஆட்டோ, டெம்போ மற்றும் பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்..
இதன் தொடர்ச்சியாக கண் பரிசோதித்து கொண்ட பயனாளிகளுக்குமூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா இல்லத்தில் நடைபெற்றது. தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். விழாவில், எதிர்கட்சி தலைவர் சிவா பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொ.மு.ச. செயலாளர் அண்ணா அடைக்கலம், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், கிளை செயலாளர்கள் ஐசக், சசி, விஜயகுமார், அகிலன், முத்து, ராஜி, தாமரை, சொல்தா ரவி, தட்சணாமூர்த்தி, புருஷோத்தமன், ஸ்ரீதர், மூர்த்தி, சேட்டு, பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தமிழக பகுதியான கடுப்பேரிகுப்பம் கிராமத்துக்கு உட்பட்ட வயல்வெளியில் நேற்று இரவு அங்குள்ள உயர் மின்னழுத்த மரம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது.
- பின்னர் அருண் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறியதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு அடுத்த கரசூர் புது காலனியை சேர்ந்த சேகர் மகன் அருண் (வயது 23), இவர் தனது நண்பர்களுடன் தமிழக பகுதியான கடுப்பேரிகுப்பம் கிராமத்துக்கு உட்பட்ட வயல்வெளியில் நேற்று இரவு அங்குள்ள உயர் மின்னழுத்த மரம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அருண் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த அருணை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருணை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அருண் இறந்து விட்டதாக கூறினர்.
சம்பவம் நடந்த இடம் கடப்பேரிகுப்பம் தமிழக பகுதி என்பதால் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அருண் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அருண் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வில்லியனூர் அடுத்த பத்துகண்ணு பகுதியில் இருந்து சேதராப்பட்டு வரை உயர் மின்னழுத்த மின்சார தடம் உள்ளது. துத்திப்பட்டு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டதால் கரசூரை மையமாக வைத்து தொண்டமாநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சேதராப்பட்டு பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கரசூர் மெயின் சுவிட்ச்சியில் இருந்து சேதராப்பட்டு வரை கடந்த சில மாதங்களாக மின் சப்ளை நிறுத்தப்பட்ட நிலையில். சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அங்கிருந்த விலை உயர்ந்த மின்சார ஒயர்கள் திருட்டுப் போயிருந்தது.
இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் வரை இருக்கும். இதுகுறித்து புதுவை மின்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட வந்த நிலையில் இதுகுறித்து ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது. மின்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அருண் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் குறித்து அவரது தந்தை சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். எப்படி அருண் இறந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.
- திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வரசிக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் நீடுழி வாழ சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியும், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 1000பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு படையாட்சி காம்ப்ளக்ஸில் ஜி.கே.ஆர். அலுவலக திறப்பு விழாவில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
அப்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஜி.கே ராஜனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். சிவனடியார் தங்கமணி தலைமையில் ஓதுவார்கள் கலந்து கொண்டு திருவாசக வாழ்த்து பாடல் பாடினர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட ,ஒன்றிய பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பா.ஜனதா பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவையின் பிராந்தியமான ஏனாம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
- ஏனாமில் உள்ள 11 ஆயிரத்து 533 சிகப்பு ரேஷன்கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்,
புதுச்சேரி:
புதுவையின் பிராந்தியமான ஏனாம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏனாம் நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏனாமில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அறிவித்தபடி ஏனாமில் உள்ள 11 ஆயிரத்து 533 சிகப்பு ரேஷன்கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம், 25 கிலோ அரிசி வழங்கப் படும். 4 ஆயிரத்து 195 மஞ்சள் கார்டுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.
வெள்ள சேதங்களை அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை அளித்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். வரும்காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்புச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் பெறவும் ந டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவு 3-ல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புதுவை:
புதுவை கவர்னர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி முதல்-அமைச்சர் அண்ணன் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மாணவி, உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். ஆன்லைனில் படிக்க மொபைல்போன் தேவைப்பட்டுள்ளது.
- மாணவியின் சித்தப்பா, ‘ஐபோன்’ வாங்கித் தருவதாகவும், சினிமா பார்க்க போகலாம் என்றும் கூறி, அழைத்து வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சந்தானம் நடித்துள்ள 'குலுகுலு' படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் பகல் காட்சி திரையிடப்பட்டது.
அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க' என பதறியடித்து ஓடி கழிவறைக்குள் புகுந்து கதவை பூட்டி, கதறிக் கொண்டே இருந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த 35 வயது நபர், அப்பெண் என்னுடன் வந்தவர் தான் மனநிலை சரியில்லாமல் கழிவறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். நான் அவருடைய சித்தப்பா. அப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என தெரிவித்தார்.
பதட்டம் அடைந்த மக்கள் மற்றும் தியேட்டர் ஊழியர்கள், அப்பெண்ணை வெளியே வருமாறு கதவை தட்டினர். அவருடன் வந்ததாக சொன்னவரும் அப்பெண்ணின் பெயரை சொல்லி கூப்பிட்டபடியே இருந்தார். ஆனால், கழிவறையின் உள்ளே இருந்த அப்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக கதறி அழுதபடியே இருந்தார். தகவல் அறிந்து வந்த உருளையன் பேட்டை போலீசார், கழிவறைக்குள் இருந்த பெண்ணிடம் பேசினர்.
'போலீஸ் வந்துள்ளோம். எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து வைக்கிறோம். வெளியே வந்து புகார் கொடுங்கள்' என கூறினர். இதையடுத்து அப்பெண் வெளியே வந்தார். அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார், தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.
'தன்னை அழைத்து வந்த சித்தப்பா பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரிடமிருந்து தப்பிக்கவே கழிவறைக்குள் சென்று பூட்டிக் கொண்டேன். அவருடன் சென்றால் என் கற்புக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லை' என கண்ணீர் விட்டு கதறினார்.
இதையடுத்து போலீசார், அந்த நபரை கவனித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட இளம்பெண் நகர பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., பிசியோதெரபி படித்து வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் சென்னையில் கூலி வேலை செய்து, மகளை படிக்க வைக்கின்றனர்.
மாணவி, உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். ஆன்லைனில் படிக்க மொபைல்போன் தேவைப்பட்டுள்ளது. அவரது சித்தப்பா, 'ஐபோன்' வாங்கித் தருவதாகவும், சினிமா பார்க்க போகலாம் என்றும் கூறி, அழைத்து வந்துள்ளார்.
ஆனால் சித்தப்பாவின் எண்ணம் வேறுவிதமாக இருந்துள்ளது. அந்த மாணவியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டு கழிவறைக்குள் மறைந்து தப்பி உள்ளார். மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அவரது சித்தப்பா, கட்டிட காண்டிராக்டராக உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மகள் உறவுமுறை கொண்ட பெண்ணிடம், பொது இடத்தில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு பயிற்சி காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
- காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி:
புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, தினமும் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பயிற்சி காவலருக்கு கடந்த ஜூன் 16-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தினமும் பயிற்சி காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரே நாளில் 29 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து, கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு பயிற்சி காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 84 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அந்த காவலர்கள் ஒரு வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், இதற்காக காவலர் பயிற்சி பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை விடுமாறும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் புதுவையில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு பாராட்டு விழா முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் புதுவையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் புதுவை ஜீ-டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வே று பரிசுகளை பெற்று சாதனை படைத்தனர். மாணவர்களுக்கு பாராட்டு விழா முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. விழாவில்பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் பாரத் கராத்தே அமைப்பின் புதுவை தலைவர் அழகப்பன்,
ஜீ-டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த பயிற்சியாளர்கள் குமரன், ராமராஜா, வினிதா, சமிதாகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






