என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். தலைமை பொறியாளர்

    சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் சேகர், இயக்குனர்கள் சரவணன், அண்ணாமலை , வெங்கடேஸ்வரன், குணசேகரபாண்டியன், கருணாகரன், வீரபுத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.
    • 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.

    கூட்டு போராட்ட குழு கன்வீனரும் பெத்தி செமினார் பள்ளி முதல்வருமான பாஸ்கல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

    7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. மறைமாவட்ட கல்வி செயலர் ஜோசப்ராஜ், இமாகுலேட் பள்ளி முதல்வர் அமலோற்பவம், தனியார் பள்ளி சம்மேளனத் தலைவர் வின்சென்ட்ராஜ், செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல்வர் மற்றும் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்தது.
    • பிம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமையில் புதிய நிர்வாகிகள் உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல்வர் மற்றும் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்தது.

    இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.பிம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமையில் புதிய நிர்வாகிகள் உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர்.

    6 ஆண்டுகளாக பணிபுரிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் ரேணு நன்றி தெரிவித்து தம் பொறுப்புகளை புதிய முதல்வர் மற்றும் இயக்குனராக தேர்வு செய்யப்பட்ட சமுதாய மருத்துவ பேராசிரியர் அனில் பூர்த்தியிடம் ஒப்படைத்தார்.இவர் 20 ஆண்டுகளாக பிம்ஸ் மருத்துவமனையில் சமுதாய மருத்துவ துறையில் பேராசிரிய ராகவும் பதிவாள ராகவும் பணிபுரிந்தவர்.

    மருத்துவ கண்காணிப்பாளராக அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றிவரும் தலைமை பேராசிரியர் டாக்டர் பீட்டர் மனோகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    மேலும், துணைமுதல்வர்களாக டாக்டர் ஸ்டாலின் (முதுநிலை பிரிவு) டாக்டர் மேகி முருகன்(இளங்கலை மருத்துவ பிரிவு) செவிலியர் கண்காணிப்பாளராக கலைவாணி, மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளராக டாக்டர் நாயர் இக்பால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பதவி ஏற்ற அனைவரையும் கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வாழ்த்தினார்.மேலும் மிகவும் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் முதல்வர் ரேணு உள்ளிட்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    • முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.
    • பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.

    இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபுவிடம் கோரிக்கை வைத்தனர்

    இதனையடுத்து பொதுப்பணிதுறை பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனத்தை வைத்து மதன்பாபு சீரமைத்தார். பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு கிராமம் புது நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
    • புதுவை அரசு ஆதிதிராவிடர் வரை நிலை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முரளி, மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு கிராமம் புது நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

    மேலும் வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது இது குறித்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. அங்காளனிடம் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து புதுவை அரசு ஆதி திராவிடர் வரைநிலை மேம்பாட்டு கழகத்தின் மூலமாக ரூ. 24 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை ஏற்பாடுகள் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு பூமி பூஜை நிகழ்ச்சி ெதாடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் பொழுது புதுவை அரசு ஆதிதிராவிடர் வரை நிலை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முரளி, மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

    • புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பள்ளி அறையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது

    தொடர்ந்து, தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பள்ளியெழுச்சி தலைவர் இளங்கோ மற்றும் கோவில் நிர்வாக தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
    • புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, காரைக்கால், ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 603, காரைக்காலில் 105, ஏனாமில் 43, மாகேவில் ஒருவர் என 752 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 69, காரைக்காலில் 27, ஏனாமில் 2 பேர் என 98 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்த 79 வயது முதியவர் ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்றும் கருமாம்பாக்கத்தை சேர்ந்த முதியவர் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 50 ஆயிரத்து 190 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தொழில்முறை வழிகாட்டு மையங்களாக மாற்ற முடிவு செய்யப் பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் உள்ள வேலை வாய்ப்பகங்களை தொழில்முறை வழிகாட்டு மையங்களாக மாற்ற முடிவு செய்யப் பட்டது. அதன் அடிப்படையில் ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுவை வேலைவாய்ப்பகம், 2016-ம் ஆண்டு நவம்பர் முதல் மாதிரி தொழில் வழிகாட்டு மையமாக செயல்பட்டு வருகிறது.மாதிரி தொழில் வழிகாட்டு மையத்தின் மூலம், வேலை தேடுபவர்களையும், வேலை அளிப்பவர்களையும் ஒருங்கிணைத்து, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    2016 முதல் 27 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 3 ஆயிரத்து 159 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, காரைக்காலில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைப்பதற்கு ரூ. 34 லட்சத்து 74 ஆயிரம், மத்திய அரசின் நிதி உதவி பெறப்பட்டு, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பூர்வாங்க பணி நடந்து வருகிறது.

    மாகி-ஏனாம் மாநில அரசின் கோரிக்கையின் பேரில், மாகி மற்றும் ஏனாமில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைக்க, முறையே ரூ.37 லட்சத்து 6 ஆயிரம் மற்றும் ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அரசின் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் ஆரம்பிப்பதற்கான அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்
    • பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட சொத்துக்களை எந்திரத்தின் மூலம் உடைத்து பெரும் சேதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பான முறையில் சாலையின் இருபுறமும் உள்ள தற்காலிக கடைகள், சட்டவிரோத பேனர்களை அகற்றாமல் நடைபாதைகளில் இல்லாத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வணிக நிறுவனங்களின் சுவர்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட சொத்துக்களை எந்திரத்தின் மூலம் உடைத்து பெரும் சேதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

    அதிகாரிகளின் இத்தகைய தவறான நடவடிக்கைகளை தடுத்திடவும், எதிர்த்துக் கேள்விகள் கேட்போரையும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் என்பது போன்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்த சில அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இது வணிகர்களுக்கு பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது.

    இதனால், நாள் தோறும் பல நெருக்கடிகளை சந்தித்து அரசுக்கு வரி வருவாய் உருவாக்கித் தரும் வணிகப்பெருமக்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கை களால் வணிகர்களுக்கு அவப்பெயர் உருவாகும் சூழல் நிலவுகிறது.

    இது புதுவையின் தொழில் மற்றும் வணிகத்துக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளில் வணிகர்க ளின் கருத்துக்களை அறிந்து, அதன்பின்னர் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்து அதன்படி எவருக்கும் எவ்விதமான பாதிப்புமின்றி ஆக்ரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்திட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    சந்திப்பின் போது வர்த்தக சபையின் துணைத்தலைவர் எல்.பி.ரவி, இணைப்பொதுச் செயலர் முகம்மது சிராஜ், பொருளாளர் வி.எம்.எஸ். ரவி, குழு உறுப்பினர்கள் தேவகுமார், ஞானசம்பந்தம், நமச்சிவாயம், டி.பி.ராமமூர்த்தி, ஜி.குமார், ராஜவேல், ஜெகதீஷ், ஜெய்கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுவை கிக் பாக்சிங் சங்கத்தின் சார்பில் 24 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்

    புதுச்சேரி:

    தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சத்யஜிராஜ் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் புதுவை கிக் பாக்சிங் சங்கத்தின் சார்பில் 24 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் பவித்ரன், மோகனசந்துரு, கவுசல்யா ஆகியோர் தங்கப்பதக்கமும், சங்கவி, கார்த்திசுந்தர், முகமது யூனுஸ், வந்தனா, மோகன சந்துரு ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.

    தேசிய அளவில் பதக்கங்களை குவித்து சாதனை புரிந்து புதுவை திரும்பிய வீரர்களை கவர்னர் தமிழசை வரவழைத்து பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன், அணி மேலாளர் கிருஷ்ணராஜ், பயிற்சியாளர் விநாயகம், துணைத்தலைவர்கள் அமிர்தராஜ், அய்யனார், பிரவீன்குமார், அபிலாஷ், ராகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரேஷன் கடைகளை திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும்.
    • சிகப்பு குடும்ப அட்டை வழங்க வேண்டும்

    புதுச்சேரி:

    ரேஷன் கடைகளை திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் அற்றவர்கள் உட்பட தகுதி உள்ள அனை வருக்கும் சிகப்பு குடும்ப அட்டை வழங்க வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட இலவச அரிசிக்கு சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.9 ஆயிரம், மஞ்சள் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். ரேஷன்கடை களில் தரமான அரிசி யாகவோ அல்லது பண மாகவோ தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியு றுத்தி புதுவை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் அறிவித்திருந்தார்.

    இதன்படி காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கு அருகிலிருந்து மார்க்சிஸ்டு கட்சியின் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வாழ்த்தி பேசினார். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ், சீனிவாசன், கொளஞ்சியப்பன், சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், ராம்ஜி, சரவணன், ராம மூர்த்தி, அன்புமணி உட்பட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேருவீதி வழியாக வந்த. போது மிஷன் வீதி சந்திப்பில் பேரிகார்டுகளை அமைத்து போலீசார் தடுத்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள், ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்துகிறோம். தலைமை செயலகம் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலரை இங்கு அழைத்து வாருங்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    தொடர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்கள் நேருவீதியில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேருவீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழிகளில் பொதுமக்கள் திரும்பிச்சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களோடு சமாதானம் பேசி தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அழைத்து சென்றனர். இருப்பினும் மார்க்சிஸ்டு கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், இலவச அரிசி வழங்க கோரி பந்த் போராட்டம் நடத்த வேண்டும். அந்த போராட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற அணிகளும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.

    • இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும்
    • அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். இந்த இருண்ட ஆட்சிக்கு தலைமை வகித்த நாராயணசாமி, தேசிய ஜனநாயக முன்னணி அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது.

    கட்சி தலைமையை திருப்திப்படுத்த, விளம்பர மோகத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். மக்கள் புறக்கணிப்பார்கள் என புரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடாமல் வஞ்சகத்தோடு ஒளிந்து கொண்டார். அவர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சி பற்றி குறைகூற தார்மீக உரிமை இல்லை.

    நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சாவர்க்கர் போன்றவர்களை பற்றி குறைத்துப் பேச நமக்கு என்ன தகுதி உள்ளது? என நாராயணசாமி உணர வேண்டும்.

    மத்திய அரசின் போதிய நிதி பெற முடியாத சூழ்நிலையிலும், மத்திய அரசுடனும், கவர்னருடனும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி ரங்கசாமி நல்லாட்சி நடத்துகிறார்.

    சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாராயணசாமி கிடப்பில்போட்டார். தற்போது இத்திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட்டு வருகிறது. கடந்த காலத்தில் கிடப்பில் போட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தரம் தாழ்ந்து முதல்-அமைச்சரையும், அரசையும் விமர்சனம் செய்வது மதிப்புமிக்க செயல் இல்லை. எனவே நாராயணசாமி அரசை விமர்சனம் செய்யும்போது நாவடக்கத்துடன் விமர்சனம் செய்வது நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×