என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயிகளுக்கு வேளாண்துறை ஊக்கமளித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    தமிழர்களின் பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தூயமல்லி, குதிரைவாலி சம்பா உட்பட 140 ரக நெற்களை இயற்கை முறையில் பயிரிட விவசாயிகளுக்கு வேளாண்துறை ஊக்கமளித்து வருகிறது. ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவித்தார்.

    கடந்த பிப்ரவரியில் வடமங்கலத்தில் நெல் திருவிழா நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள், அதன் பயன்கள், உர பயன்பாடின்றி பயிரிடும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் தலா 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. 

    மக்களிடமும் வரவேற்பு உள்ளதால் பாரம்பரிய ரக நெல் பயிரிட விவசாயிகள் முன்வந்துள்ளனர். இதை ஊக்குவிக்க சம்பா பட்டத்துக்கு முன்பாக வேளாண் துறை சார்பில், வருகிற 8-ந் தேதி கரிக்கலாம் பாக்கத்தில் நெல் திருவிழா நடத்தப்பட உள்ளது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் திருவிழாவை தொடங்கி வைத்து, 10 பாரம்பரிய ரக நெல் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ விதை நெல் வழங்குகிறார்.

    இந்த விதை நெல்லை விவசாயிகள் நாற்று விட்டு, ஒற்றை நாற்று முறையில் பயிரிட ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இலவசமாக விதை நெல் வாங்கும் விவசாயிகள், அதை பயிரிட்டு அறுவடை செய்த பின், அரசுக்கு 4 கிலோ விதை நெல் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விதை நெல் அடுத்த ஆண்டு 2 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய நெல் பயிரிடும் பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    • செவிலியர் கல்லூரியில் 18-வது பிரிவு செவிலியர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிம்ஸ் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, பிம்ஸ் செவிலியர் கல்லூரியில் 18-வது பிரிவு செவிலியர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிம்ஸ் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மோனி முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேனு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சிறப்புரையாற்றினார்.

    பேராசிரியர் ஜெய்சங்கரி தலைமையில் மாணவ-மாணவிகள் செவிலியர் பணிக்கு தங்களை அர்ப்பணித்து, மெழுகு வர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திருநெல்வேலி அல்மை ட்டி செவிலியர் கல்லூரி முதல்வர் ரெபேக்கா முதன்மை உரையாற்றினார்.

    மருத்துவ மற்றும் செவிலியர் துறை பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் வருண்பாபு நன்றி கூறினார்.

    • கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.
    • அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்

    புதுச்சேரி:

    கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.

    புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் நேதாஜி நகர் அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது. 35). இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்புடைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். புதுவையில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் போஸ்டர் ஒட்டினார்.

    அதன் பின்னார் இரவு 11.30 மணியளவில் சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சாமிபிள்ளை தோட்டத்தையை சேர்ந்த செல்வகணபதி, விஸ்வநாதன், சுதர்சன் ஆகியோர் பாஸ்கரை கையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பாஸ்கர் லாஸ்பேட்டையில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை தாக்கிய செல்வகணபதி, விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தார். சுதர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

    • மோடி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது,
    • ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது, குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற் பட்டுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களை ஒடுக்க வேண்டும் என அமலாக்க துறை, வருமான வரித்துறை மூலம் பொய் வழக்கு போட்டு மத்திய அரசு மிரட்டி வருகிறது. புதுவையில் உள்ள கவர்னர் மாளிகை தரகு அலுவலகமாக மாறியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நேரம் வரும் போது அதை வெளியிட தயாராக உள்ளோம்.

    கவர்னர் தமிழிசை தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். அவர் கவர்னர் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் காங்.கிரஸ் கட்சி அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்.

    கவர்னர் தமிழிசை பா.ஜனதா தலைவராகவும், முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். கவர்னர் மாளிகை பா.ஜனதா அலுவலகமாக மாறி வருகிறது. கவர்னர் தமிழிசை பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய செல்லும் போது சமஸ்கிருத மொழியை மாணவர்களிடம் திணிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
    • முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புதுவை பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பங்கேற்றேன்.

    வருகிற 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. புதுவையில் மோடி அரசின் மக்கள் விரோத செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சி கவிழ்ப்பு, மத கலவரம் ஆகியவற்றை எடுத்துச்செல்லும் வகையில் பாதயாத்திரை நடைபெறும்.

    மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் தொகுதி தோறும் குழுக்கள் அமைத்துள்ளோம்.

    சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மத்திய மோடி அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பா.ஜனதா அரசு இரட்டை ஆட்சி முறையை கொண்டுவந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது என கூறியுள்ளார். இதை முழுமையாக வரவேற்கி றேன்.

    புதுவையில் என் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, கவர்னர் மூலமாக ஆட்சியை முடக்கினர். இதனால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் வரவேற்கிறோம்.

    மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது. இது நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை சாவர்க்கர் தியாகி என்றும், அவருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார்.

    அவர் சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவர். தப்பித்தவறி பா.ஜனதாவில் உறுப்பினராகி, கவர்னராக உள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தோற்றுவித்தவர் சாவர்க்கர். அவரை சுதந்திர போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து வெளியே வர ஆங்கிலேயர்களுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை எழுதினார்.

    இதனால் நிபந்தனை யோடு அவர் விடுவிக்க ப்பட்டார். வெள்ளையர்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே அவர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல. கவர்னர் தமிழிசை சாவர்க்கர் சுயசரிதையை படிக்க வேண்டும். பா.ஜனதா சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது. இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    ரங்கசாமி தலைமையி லான அடிமை ஆட்சி விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி பற்றாக்குறை உள்ளது? என தெரியும்.

    தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது. கொலை நகரமாக புதுவை மாறியுள்ளது. புதுவை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    இதேநிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக்குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சிய டையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி பூசல் உருவாகியுள்ளதே என கேட்டபோது, அது எங்கள் உள்கட்சி விவகாரம், அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்தார்.

    • நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
    • தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும் எனவும் ஆலோசனை மேற்கொண்டனர்.

    ஆலோசனையில் புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • புதுவையில் 612 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 612 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 35, காரைக்காலில் 3 பேர் என புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 13, காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 592, காரைக்காலில் 99, ஏனாமில் 31, மாகியில் ஒருவர் என 723 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 72, காரைக்காலில் 30, ஏனாமில் 7, மாகியில் ஒருவர் என 110 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    புதுவை கிருமாம் பாக்கத்தை சேர்ந்த 74 வயது முதியவர் ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 326 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


    • ஆரியப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது45). இவர் லாரியில் செங்கல் லோடு ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு குணா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

    ராஜேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ராஜேந்திரன் மனைவியிடம் தகராறு செய்தார்.

    இதையடுத்து குணா கணவரிடம் கோபித்துக்கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி கோபித்து சென்றதால் ராஜேந்திரன் மன வருத்தமடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ராஜேந்திரன் இரவு வீட்டின் கூரையில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி குணா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்.
    • தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில்பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). நெல் வியாபாரி. இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சமாதி பஸ் நிறுத்தம் அ ருகே வேணுகோபால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது அவர்நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிள் விழுந்து தீப்பற்றிக்கொண்டது. இதில்உ டல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    மோட்டார் சைக்கிளும் எரிந்து தீக்கிரையாகின. அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில்பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    பின்னர் கருகிய நிலையில் இருந்த வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு வழிப்பறி செய்யும் நோக்கில் வேணுகோபாலை மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்து எரித்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டால் வாகனத்தில் இருந்து உடனடியாக தப்பியோட முயற்சிப்பார்கள், ஆனால் வேணுகோபால் மோட்டார் சைக்கிள் இருக்கையிலேயே அமர்ந்து இருந்துள்ளார். உடலில் தீப்பற்றி எரிந்தவாறே சரிந்த கீழே விழுந்துள்ளார். அதன் பிறகும் அதே இடத்தில் எரிந்து கரிக்கட்டையாகியுள்ளார். இதனால் அவரது சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கிடையே நெல் வியாபாரி வேணுகோபால் உயிரோடு எரியும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
    • மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு, துணை செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனு, மோகன்தாசு வரவேற்றார். 'கவிஞரேறு வாணிதாசரின் பன்முக பங்கு' என்ற தலைப்பில் கவியரங்கமும், 'கெஞ்சி வாழ்தல் நஞ்சினும் கொடியது' என்ற தலைப்பில் உரையரங்கமும் நடந்தது. தொடர்ந்து மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பலருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.

    விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், கவிஞர் வாணிதாசனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ளார்.
    • ஒரு சில கஞ்சா ரவுடிகள் மாணவர்களை மூளை சலவை செய்து போதைப்பழக்கத்துக்கு உட்படுத்துகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ளார்.

    புதுவை மாநிலத்தில் அரசு விதியை மீறி சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு நடத்தி ஓய்வு இல்லாமல் செயல்படுவதால் மாணவ-மாணவிகள் மன ரீதியாகவும், உலவியல் ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.

    ஒரு சில கஞ்சா ரவுடிகள் மாணவர்களை மூளை சலவை செய்து போதைப்பழக்கத்துக்கு உட்படுத்துகிறார்கள். புதுவையில் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிகிறது. கடமைக்கு வாடகை குற்றவாளிகளை போலீசார் கைது செய்கிறார்கள்.

    கஞ்சா விற்பனைக்கு மூலக்காரணமாக உள்ளவர்களை போலீசாருக்கு நன்கு தெரிந்திருந்தும் ஒட்டுமொத்தமாக நீதியின் முன்பு நிறுத்த தயங்குவது ஏன்?

    காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி அருகில் மாணவர்களுக்கு மறைமுகமாக போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து விரைவாக கைது செய்ய வேண்டும்.

    கொலை குற்றங்கள் புதுவையில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

    இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசு முன்வரவேண்டும். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பல்வேறு கூட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.
    • மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டுமான பணியை கடந்த பிப்ரவரியில் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 6 மாதத்தில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நடந்தது. எதிர்கட்சி த்தலைவர் சிவா, பிருந்தாவனம் நகர் மக்கள் முன்னிலையில் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப் பணித்தார்.

    நிகழ்ச்சியில், குடியிருப்போர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரகுராமன், சிவாஜிராவ், செல்வகணபதி, சங்கர் சீனுவாசன், வெ ங்கடகோவிந்தன், மூர்த்தி, அன்பழகன், லதா, சுகந்தி, ஆஷா, சுஜா, புவனா, அன்பழகி, தி.மு.க. நிர்வாகிகள் செல்வநாதன், மணிகண்டன், ச பரிநாதன், ரமணன், திலகர், பாபு, செல்வம், ஏழுமலை, தங்கராசு, சர்வன், சிலம்பு, ஷர்மா, பாபு, நவணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×