என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு-கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ளார்.
- ஒரு சில கஞ்சா ரவுடிகள் மாணவர்களை மூளை சலவை செய்து போதைப்பழக்கத்துக்கு உட்படுத்துகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ளார்.
புதுவை மாநிலத்தில் அரசு விதியை மீறி சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு நடத்தி ஓய்வு இல்லாமல் செயல்படுவதால் மாணவ-மாணவிகள் மன ரீதியாகவும், உலவியல் ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.
ஒரு சில கஞ்சா ரவுடிகள் மாணவர்களை மூளை சலவை செய்து போதைப்பழக்கத்துக்கு உட்படுத்துகிறார்கள். புதுவையில் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிகிறது. கடமைக்கு வாடகை குற்றவாளிகளை போலீசார் கைது செய்கிறார்கள்.
கஞ்சா விற்பனைக்கு மூலக்காரணமாக உள்ளவர்களை போலீசாருக்கு நன்கு தெரிந்திருந்தும் ஒட்டுமொத்தமாக நீதியின் முன்பு நிறுத்த தயங்குவது ஏன்?
காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி அருகில் மாணவர்களுக்கு மறைமுகமாக போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து விரைவாக கைது செய்ய வேண்டும்.
கொலை குற்றங்கள் புதுவையில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசு முன்வரவேண்டும். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பல்வேறு கூட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






