என் மலர்
புதுச்சேரி
- புதுவை மண்ணாடிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, பி.சி.ஏ. பட்டதாரி.
- தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, பி.சி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது வேலையை விட்டு விட்டு பூர்வீக விவசாய நிலத்தில் டிராகன் பழ சாகுபடி செய்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட டிராகன் பழ செடிகள், தற்போது அறுவடையை தொடங்கி உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் டிராகன் பழங்கள் புதுவையில் உள்ள பழ கடைகளில் கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
20 ஆண்டுகள் மகசூல் தரும் பயிரான டிராகன் பழ சாகுபடியில் ஒருமுறை முதலீடு செய்தால் விவசாயி கள் எந்தவித நஷ்டமும் ஏற்படாமல் அதிக லாபம் பெறலாம் என செல்வமணி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
பி.சி.ஏ. பட்டதாரியான நான் கடந்த 15 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அந்த பணி பிடிக்காததால் சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்து என்னுடைய பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது.
மற்ற விவசாயிகளை போன்று நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிர் செய்வதை தவிர்த்து, மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்து, மற்ற மாநிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்து ஆய்வு செய்தேன்.
அதன்படி, அரியானா மாநிலத்தில் அதிக அளவு பயிரிடப்படும் டிராகன் பழ செடிகளை புதுவையில் முதல் முறையாக சாகுபடி செய்ய முடிவு செய்துஎனது விவசாய நிலத்தில் ரூ.5 லட்சம் முதலீட்டில் 2000 டிராகன் பழ செடிகளை நட்டு பண்ணை அமைத்தேன்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாகுபடி செய்யப்பட்ட டிராகன் பழ செடிகள், தற்போது அறுவடையை தொடங்கி உள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டிராகன் பழங்கள் அறுவடை ஆகும்.
டிராகன் பழங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளதால் பழங்களை சந்தைப்படுத்துவது மிகவும் எளிதாக உள்ளது. தற்போது புதுவையில் உள்ள கடைகளுக்கு மொத்த வியாபாரமாக கிலோ ரூ. 150-க்கு விற்பனை செய்து வருகிறேன்.
இதனால், ஓராண்டிற்கு ஒரு செடியில் 3 கிலோ விதம் 6 டன் வரை பழங்களைப் அறுவடை செய்து, ரூ 6 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்.மற்ற விவசாயிகளும் டிராகன் பழ சாகுபடி செய்யல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
அரசும் விவசாயிகளின் இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால், விவசாயிகள் மற்ற தொழில்களுக்கு செல்லாமல், லாபம் தரும் விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இவ்வாறு செல்வமணி கூறினார்.
பட்டதாரி விவசாயி செல்வமணியை தொடர்ந்து பி.இ. சிவில் என்ஜினீயர் நண்பர் ஆனந்தும் டிராகன் பழ சாகுபடியில் இறங்கியுள்ளார்.
டிராகன் பழங்கள், மருத்துவ குணம் நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதனை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், கலோரிகள் இல்லாததால் உடல் எடையை குறைக்கவும் முடியும்.
- புதுவையில் ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 84, காரைக்காலில் 19, ஏனாமில் 10 பேர் என புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 84, காரைக்காலில் 19, ஏனாமில் 10 பேர் என புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12, காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 631, காரைக்காலில் 126, ஏனாமில் 38, மாகியில் 2 பேர் என 797 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 121, காரைக்காலில் 4 பேர் என 125 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 39 ஆயிரத்து 305 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- வீராங்கணை விஷ்ணுபிரியாவை புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
- வீராங்கணையை ஊக்குவிக்கும் விதமாக கதிர்காமம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் வடிவேலு வழங்கிய ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசையும் சிவா வழங்கினார்.
புதுச்சேரி:
கேரள மாநிலம் அளப்பி மற்றும் ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் கதிர்காமம் தொகுதி டாக்டர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்த வீரப்பன் மகள் விஷ்ணுப்பிரியா பங்குபெற்றார்.
இதில் கேரள மாநிலத்தில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கமும், ஐதராபாத்தில் நடந்த ஜூனியர், சப்–ஜூனியர் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து, புதுவைக்கு புகழ் சேர்த்துள்ளார். வீராங்கணை விஷ்ணுபிரியாவை புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வீராங்கணையை ஊக்குவிக்கும் விதமாக கதிர்காமம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் வடிவேலு வழங்கிய ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசையும் சிவா வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர் வடிவேலு, நிர்வாகிகள் தமிழ்வாணன், செல்வநாதன், மணிகண்டன், முருகையன், சபரிநாதன், ரமணன், மிலிட்டரி முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
- எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது யுவர் பேக்கர்ஸ் நிறுவனம்.
- மேலும் மணவெளி பகுதியை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் தினந்தோறும் 400 பேருக்கு இலவச உணவு, ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயத்தொழில் என ஏழை , எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது யுவர் பேக்கர்ஸ் நிறுவனம்.
மேலும் மணவெளி பகுதியை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இம்மாதம் நடை பெற்ற அரிசி வழங்கும் நிகழ்ச்சியில், யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 2 பேருக்கு, சுய தொழிலில் ஈடுபடும் விதமாக தள்ளு வண்டியும், ரிக்-ஷாவும் வழங்கினார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கபிலன் என்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3000-க்கான காசோலையை யும் அவர் வழங்கினார். இந்த நிதிஉதவி மாதந்தோறும் கபிலனின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் எனவும் கிருஷ்ணராஜூ அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், யுவர் பேக்கர்ஸ் துணை நிறுவனர்கள் முருகன், பிரகாஷ், அகிலன் மற்றும் மணவெளி பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- விஜயகுமார் (வயது 40). புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
- கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் விஜயகுமார் (வயது 40). புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார். பின்னர் கோர்ட்டு பணிகளை முடித்துக் கொண்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் தலையிலும், முகத்திலும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
இதனை கண்ட தவளக்குப்பம் போலீசார் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், ஏட்டு ராஜசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எச்.சி.எல். தனியார் நிறுவனம் மூலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
- இதில் எச்.சி.எல். தனியார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் கலந்து கொண்டு நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு கூறினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எச்.சி.எல். தனியார் நிறுவனம் மூலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
முகாமினை கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் எச்.சி.எல். தனியார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் கலந்து கொண்டு நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு கூறினார்.
தொடர்ந்து மனிதவள மேலாண்மைக் குழுவினர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தினர். இதில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரு பிரிவுகளில் தேர்வு செய்து பணி ஆணை வழங்கினர்.
இதில் ஹார்டுவேர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் சாப்டுவேர் பிரிவில் தேர்வு செய்யபட்டவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 4.25 லட்சமாகவும் பெறுவார்கள் என தெரிவித்து உள்ளனர்
இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சேதுமாதவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு, கல்லுாரியின் கணக்கு அதிகாரி ராஜேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே மதகடிப்பட்டு தம்பி தோப்பு பகுதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் தாமரைக்குளம் காலனியை சேர்ந்த அருணாச்சலம் (வயது25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
இதுபோல் போல் சூரமங்கலம் சந்திப்பில் மது குடித்து விட்டு ரகளை செய்த விழுப்புரம் அருகே கொத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள்தீபன்(26) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
- மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள மதுரை அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
புதுச்சேரி:
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். திருபுவனை அருகே கலித்தீர்தாள்குப்பம் வி.கே.நகரை சேர்ந்தவர் மதுரை. தொழிலாளி. இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள மதுரை அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் மதுரை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார்.
இதனை அவரது மனைவி உமாமகேஸ்வரி கண்டித்தார். பின்னர் மதுரை வீட்டிலேயே தூங்கினார். வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுரை அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மாலையில் திருபுவனை சுப்ரீம் நகரில் மதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடப்பதாக உமாமகஸே்வரிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து உமாமகஸே்வரி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சொத்து பாகப்பிரிவினை தகராறில் தாயை கிரைண்டர் கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவரது மனைவி சகுந்தலா(வயது70). இவர்களுக்கு 3 மகன்களும், விசாலாட்சி என்ற மகளும் உள்ளனர்.
புதுச்சேரி:
சொத்து பாகப்பிரிவினை தகராறில் தாயை கிரைண்டர் கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர் அருகே குருவி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சகுந்தலா(வயது70). இவர்களுக்கு 3 மகன்களும், விசாலாட்சி என்ற மகளும் உள்ளனர். விசாலாட்சியை வளவ னூர் அருகே பக்கமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் இறந்து போனார். இதையடுத்து சகுந்தலா தனது பூர்வீக சொத்தை 3 மகன்களுக்கும் சரிபாதியாக எழுதி வைத்தார். மேலும் சொத்தின் ஒரு பாகத்தை தனது பெயரில் எழுதி வைத்து கொண்டு அவர் இறந்த பிறகு அந்த சொத்து மகளுக்கு சொந்தம் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு சகுந்தலாவின் ஒரு மகனான சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் சகுந்தலா வீட்டில் இருந்த போது அங்கு வந்த சண்முகம் சொத்தை விசாலாட்சிக்கு தரக்கூடாது என சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் கிரைண்டர் கல்லை எடுத்து இதோடு ஒழிந்து போ என கூறி சகுந்தலாவின் தலையில் தூக்கி போட்டார்.
மேலும் அங்கு கிடந்த மரக்கட்டையால் தாயாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட சகுந்தலா சிகிச்சைக்காக பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதனையறிந்த அவரது மகள் விசாலாட்சி விரைந்து வந்து தாயாரை மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெற்றோர்- ஆசிரியர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- விழாவை மூத்த விரிவுரையாளர்.விஜயலட்சுமி வரவேற்றார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விழாவை மூத்த விரிவுரையாளர்.விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கி மாணவர்கள் எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்?
அவர்களை வீட்டில் பெற்றோர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்? மேலும், மாணவர்களின் சீருடை மற்றும் சிகை அலங்காரத்தில் பெற்றோர்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து அறிவுரை கூறினார்.
விரிவுரையாளர்கள் கார்த்திகேயன், பழனி, வெங்கடேசன், சந்திரிகா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வழங்கினர்.
ஆங்கில விரிவுரையாளர் அன்னி மேரி மார்ஸ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், மணிகண்டன் மற்றும் எழிலரசி ஆகியோர் செய்து இருந்தனர்.
- புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
- பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர்.
புதுச்சேரி:
புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர். சிறப்பு விருந்தினர்களாக புதுவை தேசிய மாணவர் படை ஆணை யர் பியூஸ்ஸ்ரீவஸ் தவா, தனியார் நிறுவன மேலாளரும், முன்னாள் மாணவியுமான திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், தனியார் மருத்துவமனை இயக்குனர் நல்லாம், பள்ளி முன்னாள் மாணவியும், மருத்துவருமான விக்னிதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பிரடெ ரிக் வரவேற்றார். இதில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா மற்றும் பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீதா ராமன், முத்தானந்தம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
- சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி தலைவர் சனில் குமார், செயலாளர் முருகையன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன் பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில செயலாளர்கள் நாகராஜ், ரத்தினவேல், லதா, ஜெயந்தி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, உழவர் கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






