search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேலைவாய்ப்பு முகாம்
    X

    கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது எடுத்தபடம்.

    வேலைவாய்ப்பு முகாம்

    • ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எச்.சி.எல். தனியார் நிறுவனம் மூலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
    • இதில் எச்.சி.எல். தனியார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் கலந்து கொண்டு நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு கூறினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எச்.சி.எல். தனியார் நிறுவனம் மூலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

    முகாமினை கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் எச்.சி.எல். தனியார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் கலந்து கொண்டு நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு கூறினார்.

    தொடர்ந்து மனிதவள மேலாண்மைக் குழுவினர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தினர். இதில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரு பிரிவுகளில் தேர்வு செய்து பணி ஆணை வழங்கினர்.

    இதில் ஹார்டுவேர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் சாப்டுவேர் பிரிவில் தேர்வு செய்யபட்டவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 4.25 லட்சமாகவும் பெறுவார்கள் என தெரிவித்து உள்ளனர்

    இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சேதுமாதவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு, கல்லுாரியின் கணக்கு அதிகாரி ராஜேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×