என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    புதுச்சேரி:

    போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43).வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் திரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலை வீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்து போன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • திருமண மண்டப உரிமையாளர்கள் நல சங்கத்தலைவர் இசைக்கலைவன் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
    • நீருக்கு குடிநீர் கட்டணம், பயன்படுத்திய நீரை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கு கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் வியாபார பிரமுகர்கள் செலுத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம் மற்றும் புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நல சங்கத்தலைவர் இசைக்கலைவன் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நிலத்திற்கு நிலவரி, நிலத்தில் வசிப்பதற்கு வீட்டுவரி, வீட்டில் பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீருக்கு குடிநீர் கட்டணம், பயன்படுத்திய நீரை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கு கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் வியாபார பிரமுகர்கள் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கழிவுநீர் வாய்க்கால் வரியும் வியாபார பிரமுகர்கள் மீது சுமத்தப்படுகிறது . ஏற்கனவே குடிநீர் கட்டணம் 5 ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்துள்ளது இந்த நிலையில் புதியதாக ஒரு வரி விதிப்பது வணிகர்களை மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

    சமீபத்தில் மத்திய அரசு புதியதாக அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட ஜி.எஸ்,டி. வரியால் வணிகர்களுக்கு வரிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மார்ச்2017 முதல் டிசம்பர்2020 வரை பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கும், திருமண மண்டபங்களுக்கு ம், தங்கும் விடுதி களுக்கும், கழிவு நீர் வாய்க்கால் வரி மாதம் ரூ 1000 வீதம் கணக்கிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.46 ஆயிரம் வரி பாக்கி செலுத்த சொல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ரசீது வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வரி கட்டி வருகின்ற நிலையில் நீர் பயன்பாட்டிற்கு பிறகு அதை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கும் அதற்குரிய தொகையை கட்டி இணைப்பை பெற்றுள்ளோம்.

    எனவே கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண நிலையங்கள் ஆகியவற்றின் பொருளாதார சரிவினை கருத்தில் கொண்டு கழிவுநீர் வாய்க்கால் வரியினை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் புதுவை வர்த்தக சபைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ரவி, சிட்டா அமைப்பைச் சார்ந்த சதாசிவம் , திருமண மண்டப உரிமையாளர் நல சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.
    • போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மாகிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலையாள மொழி பேசும் மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.

    பின்னர் உஸ்மான் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து மாலை மாகி அரசு சென்ட்ரல் ஹாலில் நடை பெற்ற அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு மாகி பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் பரம்பத், அசோக் பாபு, மாகி பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா,போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரத்தினவேல், ஜெயக்குமார், தொகுதி தலைவர் தினேஷன், மனோஜ், சுனில், ரஜீஷ், பிரதீஷ், திரிஜேஷ், ஜெயேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    • பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    பாகூர் அருகே செலிமேடு பேட் புது தெருவை சேர்ந்தவர் ரவிசாஸ்திரி (வயது33). டிரைவர் வேலை செய்து வந்தார். இவரும் பெருங்களுரை சேர்ந்த புனிதா(28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    புனிதா கிருமாம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ரவிசாஸ்திரி தனது மனைவி புனிதாவை பணிக்காக தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் துணி துவைத்துக்கொண்டி ருந்தார்.

    அப்போது திடீரென ரவிசாஸ்திரி மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரவிசாஸ்திரியை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிசாஸ்திரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரவிசாஸ்திரி கடந்த 5 ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலு கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது.
    • இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் முன்னிலை வகித்தார்.

    புதுவை அஞ்சலக கோட்ட விற்பனை மேலாளர் ரட்சகன், இந்திய அஞ்சல் வங்கி மேலாளர் ஆனந்த், சுதன், கணினி மேலாளர் கிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த முகாமில் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை சேர்த்தல், மாற்றுதல், பிழை திருத்தம், அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்குதல், அஞ்சலக மூலம் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சேவை திட்டங்களில் சேர்தல் உள்ளிட்ட சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • புதுவையில் ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 111, காரைக்காலில் 27, ஏனாமில் 5 பேர் என புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 111, காரைக்காலில் 27, ஏனாமில் 5 பேர் என புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 12, காரைக்காலில் 4, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 668, காரைக்காலில் 110, ஏனாமில் 27, மாகியில் 2 பேர் என 807 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 109, காரைக்காலில் 81, ஏனாமில் 3 பேர் என 143 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 29 ஆயிரத்து 611 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாக சுவரில் கவர்னர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார்.
    • சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை

    புதுச்சேரி:

    புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாக சுவரில் கவர்னர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார். 

    சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என கூறி அவரது பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு அருகே சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் திரண்டனர். தமிழர் களம் செயலாளர் அழகர், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் சிவ வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் அப்துல்லா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அனிப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் பரகத்துல்லா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன்.

    தமிழ் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேல்சாமி, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, பீ போல்ட் அமைப்புத் தலைவர் பஷீர், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் ரமேஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் சாந்தகுமார், பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடற்கரை சாலை நோக்கி சென்றனர். அவர்களை புஸ்சி வீதி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் தடுப்புகளின் மீது ஏறி நின்று போராட்டக்குழுழுவினர் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சாவர்க்கர் படத்துக்கு அவமரியாதை செய்த குழுவினர் சாவர்க்கர் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சாவர்க்கர் பெயரை தியாக சுவரில் இருந்து நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது.

    அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர் இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    ஜூலை 30 தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர்,இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம், 8 மணி வேலை நேரம் கேட்டு நடந்த போராட்டத்தில் உயிர்நீத்த 12 தியாகிகள் பெயரால் உறுதிமொழி வாசிக்க, மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தியாகிகள் கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கன்னியப்பன் ஏற்றினார். இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கலியபெருமாள், சந்திரசேகரன், முருகன், செல்வராசு, சேகர், தயாளன், ரவிச்சந்திரன், முத்துராமன், நளவேந்தன், செந்தில்முருகன், பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேசிகன், பூபதி, மூர்த்தி, சுப்பையா, கல்யாணசுந்தரம், இளங்கோ, திருஞானமூர்த்தி, ராஜி, ஏழுமலை, சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோல் தியாகிகள் சிலைக்கு சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. பிரதேச தலைவர் முருகன், நிர்வாகிகள் ராமசாமி, குணசேகரன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதிவாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி, ராஜ்குமார் உட்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அவர் பேசினார்.
    • தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பெங்களூரு இந்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை இன்று புதுவைக்கு வந்தார்.

    கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அவர் பேசினார். பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் 75 மாணவர் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது.

    அதில் புதுவை சார்பில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கவர்னர், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், விஞ்ஞானி கோகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    • இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ராஜேந்திரனிடம் விற்றனர்.
    • நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்துபோன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • செந்தில் குமார் தனது மனைவி ஜெயலட்சுமி, மகள், மகனுடன் கடலூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்,
    • கடந்த ஜூன் 22-ந் தேதி இரவு 7 மணியளவில் வெளியே சென்ற செந்தில் குமார்மீண்டும் வீடு திரும்பவில்லை.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல், (65) இவரது மகன் செந்தில்குமார், (39).

    இருவரும் வட்டிக்கும் பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர். செந்தில் குமார் தனது மனைவி ஜெயலட்சுமி, மகள், மகனுடன் கடலூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த ஜூன் 22-ந் தேதி இரவு 7 மணியளவில் வெளியே சென்ற செந்தில் குமார்மீண்டும் வீடு திரும்பவில்லை. பாகூர் அருகே குருவிநத்தம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், கொலை நடந்த அன்று செந்தில்குமார் மொபைல்போனிற்கு, சோரியாங்குப்பம் முதியவர் ஒருவரின்மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. முதியவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முதியவரிடம் போன்வாங்கி பேசியது, செந்தில்குமாரின் நண்பரான குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கண்ணன்(40), என்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும், அவரது நண்பர் செல்வமும் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசில் கண்ணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பாத்திரக்கடை வைத்து நடத்தி வந்தேன். நானும், செந்தில்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள்.தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்படவே கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தேன்.

    இதனால் எனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடன் சேர்ந்து, செந்தில்குமாரை கடத்தி, அவரது தந்தையிடம் ரூ.20 லட்சம் பறித்து கடனை அடைத்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என திட்டம் திட்டினேன். போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக எனது மொபைல் போனை பழுது என கூறி, வடலூரில் உள்ள ஒரு மொபைல்போன் சர்வீஸ் சென்டரில் கொடுத்தேன்.

    அதேபோல், மொபைல் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு செல்வத்திடமும் கூறினேன். அன்று மாலை இருவரும் சோரியாங்குப்பம் வந்தோம். அங்கிருந்த முதியவரிடம் மொபைல் போன்வாங்கி, செந்தில்குமாருக்கு போன் செய்தோம். மது குடிக்கலாம் என கூறி வரவழைத்தோம். அவர் வந்ததும் மூன்று பேரும் மது குடித்தோம். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், செந்தில்குமாரை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்றோம்.

    செந்தில்குமாருக்கு போதை தலைக்கேறி மயங்கி பின், அவரது மொபைல் போனில் இருந்து அவரது தந்தைக்கு போன் செய்து பணம் கேட்கலாம் என முடிவு செய்தோம்.

    ஆனால் அதற்குள், செந்தில்குமாருக்கு போதை தெளிந்த நிலையில், மொபைல் போனை தர மறுத்தார்.

    எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நானும், செல்வமும் சேர்ந்து, கற்களாலும், பீர் பாட்டிலாலும் செந்தில்குமாரை அடித்து கொலை செய்தோம்.

    பின்னர் அவரது மொபைல் போன் மற்றும் மோதிரத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கைதான 2 பேரையும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர். குற்றவாளிகளை பிடித்த பாகூர் போலீசார் மற்றும் குற்ற புலனாய்வு போலீசாரை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் பாராட்டினர்.

    ×