search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நினைவு சின்னத்தில் தொழிலாளர்கள் அஞ்சலி
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற் சங்கத்தினர் தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய காட்சி.

    நினைவு சின்னத்தில் தொழிலாளர்கள் அஞ்சலி

    • பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    ஜூலை 30 தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர்,இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம், 8 மணி வேலை நேரம் கேட்டு நடந்த போராட்டத்தில் உயிர்நீத்த 12 தியாகிகள் பெயரால் உறுதிமொழி வாசிக்க, மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தியாகிகள் கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கன்னியப்பன் ஏற்றினார். இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கலியபெருமாள், சந்திரசேகரன், முருகன், செல்வராசு, சேகர், தயாளன், ரவிச்சந்திரன், முத்துராமன், நளவேந்தன், செந்தில்முருகன், பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேசிகன், பூபதி, மூர்த்தி, சுப்பையா, கல்யாணசுந்தரம், இளங்கோ, திருஞானமூர்த்தி, ராஜி, ஏழுமலை, சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோல் தியாகிகள் சிலைக்கு சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. பிரதேச தலைவர் முருகன், நிர்வாகிகள் ராமசாமி, குணசேகரன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதிவாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி, ராஜ்குமார் உட்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×