என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவையில் 143 பேருக்கு கொரோனா
- புதுவையில் ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 111, காரைக்காலில் 27, ஏனாமில் 5 பேர் என புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 111, காரைக்காலில் 27, ஏனாமில் 5 பேர் என புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 12, காரைக்காலில் 4, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 668, காரைக்காலில் 110, ஏனாமில் 27, மாகியில் 2 பேர் என 807 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 109, காரைக்காலில் 81, ஏனாமில் 3 பேர் என 143 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 29 ஆயிரத்து 611 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






