என் மலர்
புதுச்சேரி

அஞ்சல் துறை சிறப்பு சேவை முகாம் நடைபெற்ற காட்சி.
அஞ்சல் துறை சிறப்பு சேவை முகாம்
- திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது.
- இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் முன்னிலை வகித்தார்.
புதுவை அஞ்சலக கோட்ட விற்பனை மேலாளர் ரட்சகன், இந்திய அஞ்சல் வங்கி மேலாளர் ஆனந்த், சுதன், கணினி மேலாளர் கிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை சேர்த்தல், மாற்றுதல், பிழை திருத்தம், அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்குதல், அஞ்சலக மூலம் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சேவை திட்டங்களில் சேர்தல் உள்ளிட்ட சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






