என் மலர்
நீங்கள் தேடியது "Association petition"
- திருமண மண்டப உரிமையாளர்கள் நல சங்கத்தலைவர் இசைக்கலைவன் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
- நீருக்கு குடிநீர் கட்டணம், பயன்படுத்திய நீரை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கு கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் வியாபார பிரமுகர்கள் செலுத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம் மற்றும் புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நல சங்கத்தலைவர் இசைக்கலைவன் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நிலத்திற்கு நிலவரி, நிலத்தில் வசிப்பதற்கு வீட்டுவரி, வீட்டில் பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீருக்கு குடிநீர் கட்டணம், பயன்படுத்திய நீரை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கு கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் வியாபார பிரமுகர்கள் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கழிவுநீர் வாய்க்கால் வரியும் வியாபார பிரமுகர்கள் மீது சுமத்தப்படுகிறது . ஏற்கனவே குடிநீர் கட்டணம் 5 ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்துள்ளது இந்த நிலையில் புதியதாக ஒரு வரி விதிப்பது வணிகர்களை மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு புதியதாக அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட ஜி.எஸ்,டி. வரியால் வணிகர்களுக்கு வரிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மார்ச்2017 முதல் டிசம்பர்2020 வரை பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கும், திருமண மண்டபங்களுக்கு ம், தங்கும் விடுதி களுக்கும், கழிவு நீர் வாய்க்கால் வரி மாதம் ரூ 1000 வீதம் கணக்கிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.46 ஆயிரம் வரி பாக்கி செலுத்த சொல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ரசீது வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வரி கட்டி வருகின்ற நிலையில் நீர் பயன்பாட்டிற்கு பிறகு அதை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கும் அதற்குரிய தொகையை கட்டி இணைப்பை பெற்றுள்ளோம்.
எனவே கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண நிலையங்கள் ஆகியவற்றின் பொருளாதார சரிவினை கருத்தில் கொண்டு கழிவுநீர் வாய்க்கால் வரியினை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் புதுவை வர்த்தக சபைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ரவி, சிட்டா அமைப்பைச் சார்ந்த சதாசிவம் , திருமண மண்டப உரிமையாளர் நல சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






