search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunk driving"

    • குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் போலீசார் நெட்டப்பாக்கம் நெற்களம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த குமரவேல் (வயது 29) மற்றும் சதீஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மடுகரை பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த லோகநாதன் (21), பிரகாஷ் (25) மற்றும் நெட்டப்பாக்கம் சிவபெருமான் நகரில் குடிபோதையில் ரகளை செய்த செர்ணாவூர் பகுதியை சேர்ந்த ரகு (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக அதற்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக ரூ. 28 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் கடந்த ஆண்டு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 24-ந்தேதி வரை 15 ஆயிரத்து 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரூ.15 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.43 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

    இது போன்று அபராதம் விதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 50 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்ட 28 ஆயிரத்து 23 வழக்குகளில் 13 ஆயிரத்து 35 பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தி உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து 13 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு இதுவரை 15 ஆயிரத்து 231 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்து 527 பேர் மட்டுமே ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 3 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கடந்த 1 ஆண்டில் போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து 16 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாமல் காலம் தாழ்த்தி வரும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ரகளை செய்த 3 பேரும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி விட்டனர். விசாரணையில் பிடிப்பட்டவர் சாரம் வேலன் நகரை சேர்ந்த சத்திய மூர்த்தி(வயது19) மற்றும் தப்பியோடியவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய் மற்றும் சக்தி நகரை சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபோல் புதுவை அண்ணாசாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த கண்டக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சங்கர் என்ற பிரவீன்(25) என்பவரை ஒதியஞ்சாலை போலீசாரும், தென்னஞ்சாலை ரோட்டில் ஒரு டீக்கடை அருகே ரகளையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியை சேர்ந்த வெங்கடேசன்(38) என்பவரை உருளை யன்பேட்டை போலீசாரும் கைது செய்தனர்.

    • புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் கனரக வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே ஒரு வாலிபர் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடை யூறாக ரகளை செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் மயிலம் அருகே பாதிரியாபுலியூரை சேர்ந்த சீனிவாசன்(வயது30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரகளை செய்த லாஸ்பேட்டை வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு(33) என்பவரை லாஸ்பேட்டை போலீசாரும், உழவர்கரை குண்டு சாலை ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்ட மூலம்குளம் அன்னை தெரேசாநகரை சேர்ந்த ரவி(37) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசாரும், சேதராப்பட்டு சந்திப்பில் போதையில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட வானூர் அருகே கொடூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (40) என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் திருக்கனூர் அருகே மணலிபட்டு பாலத்தில் நின்று கொண்டு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வானூரை சேர்ந்த சக்ரபாணி(35) மற்றும் ராஜேஷ்(32) ஆகியோரை திருக்கனூர் போலீசாரும், சந்தை புதுக்குப்பம் புது அய்யனார் கோவில் தெருவில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த முத்தாள்ராயன்(25) என்பவரை காட்டே ரிக்குப்பம் போலீசாரும், கரியமாணிக்கத்தில் சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.

    இதேபோல் திருபுவனை, முதலியார்பேட்டை, தவளக்குப்பம், பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடி போதையில் ரகளை செய்த 4 பேரை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
    • குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் விதிமுறைகள் மீறுபவர்களுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் 4 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசி எப்படி வாகனம் ஓட்டியது என 130 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 130 பேரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்ப ட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    • புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    மது குடித்து விட்டு ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    ஒரே நாளில் நெட்டப்பாக்கம், திருக்கனூர், திருபுவனை, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பெட்ரோல் பங்க் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கீழுர் மூகாம்பிகை நகர் விசுவநாதன்(42), ஏரிப்பாக்கம் மெயின் ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த சூரமங்கலத்தை சேர்ந்த அருள்குமார்(35), கொத்தம்பாக்கத்தை சேர்ந்த வினோத்(29) மற்றும் நெட்டப்பாக்கம் வடகொள்ளி ரோட்டில் குடித்து விட்டு ரகளை செய்த பண்டசோழநல்லூர் வி.வி.ஆர். நகரை சேர்ந்த ராம்குமார் (35) ஆகிய 4 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம்-திருவண்ணாமலை ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த திருவக்கரையை சேர்ந்த ராஜகுரு என்பவரை திருக்கனூர் போலீசாரும், வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட கோலியனூர் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக்(28) என்பவரை வில்லியனூர் போலீசார் கைதுசெய்தனர்.

    • மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு தம்பி தோப்பு பகுதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் தாமரைக்குளம் காலனியை சேர்ந்த அருணாச்சலம் (வயது25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

    இதுபோல் போல் சூரமங்கலம் சந்திப்பில் மது குடித்து விட்டு ரகளை செய்த விழுப்புரம் அருகே கொத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள்தீபன்(26) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது வழக்கு போடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
    பிரபல சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். கார் தாறுமாறாக வேகமாக வந்ததால் போக்குவரத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    காரை மடக்கி விசாரித்தார்கள். அப்போது நடிகர் மனோஜ் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் மின்னணு ரசீது (இ-சலான்) வழங்கினார்கள்.


    பறிமுதல் செய்யப்பட்ட காரை படத்தில் காணலாம்.

    மனோஜ் ஓட்டி வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மனோஜ், டிரைவரை அனுப்பி காரை எடுத்துச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் மனோஜ் காரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு போய்விட்டார்.அவர் கோர்ட்டில்தான் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகர் ஜெய் இதுபோல் குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×