என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிரைண்டர் கல்லால் தாயை கொல்ல முயன்ற மகன்
    X

    கோப்பு படம்

    கிரைண்டர் கல்லால் தாயை கொல்ல முயன்ற மகன்

    • சொத்து பாகப்பிரிவினை தகராறில் தாயை கிரைண்டர் கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இவரது மனைவி சகுந்தலா(வயது70). இவர்களுக்கு 3 மகன்களும், விசாலாட்சி என்ற மகளும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    சொத்து பாகப்பிரிவினை தகராறில் தாயை கிரைண்டர் கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் அருகே குருவி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சகுந்தலா(வயது70). இவர்களுக்கு 3 மகன்களும், விசாலாட்சி என்ற மகளும் உள்ளனர். விசாலாட்சியை வளவ னூர் அருகே பக்கமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் இறந்து போனார். இதையடுத்து சகுந்தலா தனது பூர்வீக சொத்தை 3 மகன்களுக்கும் சரிபாதியாக எழுதி வைத்தார். மேலும் சொத்தின் ஒரு பாகத்தை தனது பெயரில் எழுதி வைத்து கொண்டு அவர் இறந்த பிறகு அந்த சொத்து மகளுக்கு சொந்தம் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு சகுந்தலாவின் ஒரு மகனான சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் சகுந்தலா வீட்டில் இருந்த போது அங்கு வந்த சண்முகம் சொத்தை விசாலாட்சிக்கு தரக்கூடாது என சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் கிரைண்டர் கல்லை எடுத்து இதோடு ஒழிந்து போ என கூறி சகுந்தலாவின் தலையில் தூக்கி போட்டார்.

    மேலும் அங்கு கிடந்த மரக்கட்டையால் தாயாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட சகுந்தலா சிகிச்சைக்காக பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதனையறிந்த அவரது மகள் விசாலாட்சி விரைந்து வந்து தாயாரை மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×