search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regions"

    தொழில்முறை வழிகாட்டு மையங்களாக மாற்ற முடிவு செய்யப் பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் உள்ள வேலை வாய்ப்பகங்களை தொழில்முறை வழிகாட்டு மையங்களாக மாற்ற முடிவு செய்யப் பட்டது. அதன் அடிப்படையில் ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுவை வேலைவாய்ப்பகம், 2016-ம் ஆண்டு நவம்பர் முதல் மாதிரி தொழில் வழிகாட்டு மையமாக செயல்பட்டு வருகிறது.மாதிரி தொழில் வழிகாட்டு மையத்தின் மூலம், வேலை தேடுபவர்களையும், வேலை அளிப்பவர்களையும் ஒருங்கிணைத்து, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    2016 முதல் 27 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 3 ஆயிரத்து 159 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, காரைக்காலில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைப்பதற்கு ரூ. 34 லட்சத்து 74 ஆயிரம், மத்திய அரசின் நிதி உதவி பெறப்பட்டு, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பூர்வாங்க பணி நடந்து வருகிறது.

    மாகி-ஏனாம் மாநில அரசின் கோரிக்கையின் பேரில், மாகி மற்றும் ஏனாமில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைக்க, முறையே ரூ.37 லட்சத்து 6 ஆயிரம் மற்றும் ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அரசின் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் ஆரம்பிப்பதற்கான அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×