என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
    X

    பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

    • 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். தலைமை பொறியாளர்

    சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் சேகர், இயக்குனர்கள் சரவணன், அண்ணாமலை , வெங்கடேஸ்வரன், குணசேகரபாண்டியன், கருணாகரன், வீரபுத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×