என் மலர்
நீங்கள் தேடியது "medal and record"
- புதுவை கிக் பாக்சிங் சங்கத்தின் சார்பில் 24 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்
புதுச்சேரி:
தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சத்யஜிராஜ் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் புதுவை கிக் பாக்சிங் சங்கத்தின் சார்பில் 24 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் பவித்ரன், மோகனசந்துரு, கவுசல்யா ஆகியோர் தங்கப்பதக்கமும், சங்கவி, கார்த்திசுந்தர், முகமது யூனுஸ், வந்தனா, மோகன சந்துரு ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
தேசிய அளவில் பதக்கங்களை குவித்து சாதனை புரிந்து புதுவை திரும்பிய வீரர்களை கவர்னர் தமிழசை வரவழைத்து பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன், அணி மேலாளர் கிருஷ்ணராஜ், பயிற்சியாளர் விநாயகம், துணைத்தலைவர்கள் அமிர்தராஜ், அய்யனார், பிரவீன்குமார், அபிலாஷ், ராகுல் ஆகியோர் உடனிருந்தனர்.






