என் மலர்
புதுச்சேரி

அருண்
உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி
- தமிழக பகுதியான கடுப்பேரிகுப்பம் கிராமத்துக்கு உட்பட்ட வயல்வெளியில் நேற்று இரவு அங்குள்ள உயர் மின்னழுத்த மரம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது.
- பின்னர் அருண் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறியதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு அடுத்த கரசூர் புது காலனியை சேர்ந்த சேகர் மகன் அருண் (வயது 23), இவர் தனது நண்பர்களுடன் தமிழக பகுதியான கடுப்பேரிகுப்பம் கிராமத்துக்கு உட்பட்ட வயல்வெளியில் நேற்று இரவு அங்குள்ள உயர் மின்னழுத்த மரம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அருண் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த அருணை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருணை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அருண் இறந்து விட்டதாக கூறினர்.
சம்பவம் நடந்த இடம் கடப்பேரிகுப்பம் தமிழக பகுதி என்பதால் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அருண் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அருண் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வில்லியனூர் அடுத்த பத்துகண்ணு பகுதியில் இருந்து சேதராப்பட்டு வரை உயர் மின்னழுத்த மின்சார தடம் உள்ளது. துத்திப்பட்டு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டதால் கரசூரை மையமாக வைத்து தொண்டமாநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சேதராப்பட்டு பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கரசூர் மெயின் சுவிட்ச்சியில் இருந்து சேதராப்பட்டு வரை கடந்த சில மாதங்களாக மின் சப்ளை நிறுத்தப்பட்ட நிலையில். சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அங்கிருந்த விலை உயர்ந்த மின்சார ஒயர்கள் திருட்டுப் போயிருந்தது.
இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் வரை இருக்கும். இதுகுறித்து புதுவை மின்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட வந்த நிலையில் இதுகுறித்து ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது. மின்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அருண் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் குறித்து அவரது தந்தை சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். எப்படி அருண் இறந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.






