என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "research project"

    • சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த புதிய ஆராய்ச்சி திட்டத்தை துணைவேந்தர் குர்மீத்சிங் தொடங்கி வைத்தார்.
    • விளைவுகள், குறைக்குள் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த புதிய ஆராய்ச்சி திட்டத்தை துணைவேந்தர் குர்மீத்சிங் தொடங்கி வைத்தார்.

    திட்டத்தின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள், விளைவுகள், குறைக்குள் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அமெரிக்காவின் டைவர்ஜென்ட் பாத்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

    ஓய்வுபெற்ற பேராசிரியர் அப்பாசி, புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தஸ்னீம் அப்பாசி ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.

    ×