என் மலர்
புதுச்சேரி

ஒரே நாளில் 29 போலீசாருக்கு கொரோனா- புதுவை காவலர் பயிற்சி பள்ளிக்கு 1 வாரம் வார விடுமுறை
- கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு பயிற்சி காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
- காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி:
புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, தினமும் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பயிற்சி காவலருக்கு கடந்த ஜூன் 16-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தினமும் பயிற்சி காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரே நாளில் 29 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து, கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு பயிற்சி காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 84 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அந்த காவலர்கள் ஒரு வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், இதற்காக காவலர் பயிற்சி பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை விடுமாறும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






