search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இரு வழி சாலையாக மாற்றிய போக்குவரத்து போலீசார்
    X

    தவளகுப்பத்தில் புதுவை-கடலூர் ரோட்டில் இருவழி சாலையாக மாற்ற போக்கு வரத்து போலீசார் தடுப்பு கட்டைகள் அமைக்கும் காட்சி.

    இரு வழி சாலையாக மாற்றிய போக்குவரத்து போலீசார்

    • கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது.
    • அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 இடங்களை விபத்து அதிக விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கடலூர்-புதுவை ரோடு அரியாங்குப்பம், நோணாங்குப்பம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம் - புதுநகர் கன்னியாகோயில்- முள்ளோடை ஆகிய இடங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

    புதுவை அரசு தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித் துறைக்கு கடலூர்- புதுவை சாலையை இரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யாமல், நிதி காரணம் என அதிகாரிகள் பொதுமக்களிடம், சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படும் பகுதியை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு கட்டை மற்றும் இருவழி சாலைக்கு நடு கட்டைகள் அமைத்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக இடையார்பாளை யத்திலிருந்து - தவளக்கு ப்பம் வரை விபத்து அதிகரித்து வந்ததால் தன்னார்வு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 300 மீட்டருக்கு இருவழிச் சாலைக்கான நடுகட்டைகள் அமைத்துள்ளனர்.

    மேலும் விபத்தை குறைக்க பல்வேறு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்டத்தை மீறாமல் ஹெல்மெட் அணிதல், செல்போன் பேசுவதை தவிர்த்தல், அதிக பாரத்துடன் செல்வதை தவிர்த்தல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×