search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாள்  துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதி ராஜவேலு ஆகியோர் வழங்கிய காட்சி.

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாள் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டப்பாக்கம், மடுகரை, கரியமாணிக்கம், கரையாம்புத்தூர், கல்மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானமும் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், அந்தந்த கிராம பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×