என் மலர்

புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
X

பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவம் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கடற்கரை சாலையில் நடைபெற்ற காட்சி.

பிம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
 • மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி:

உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ் மருத்துவ கல்லூரி செவிலியர் மற்றும் மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.கார்கில் நினைவிடத்தில் இருந்து தலைமை செயலகம் வழியாக காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி துணை முதல்வர் ஸ்டாலின் சமுதாய மருத்துவர் வேலவன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் பீட்டர் பிரஷாந்த் நன்றி கூறினார். 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Next Story