என் மலர்

புதுச்சேரி

விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா
X

நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 171-வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.

விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.
 • ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.

இன்று தொடங்கியது. இந்த ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் ஆயர் இராயப்பன் திருப்பலி நிறைவேற்றினார்.

தொடர்ந்து மாதாவின் கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் அருட்தந்தை யர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நவநாட்களான 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் சிறப்பு மறையுரை, சிறிய தேர்பவனி நடக்கிறது.

ஆடம்பர தேர் பவனி விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டு பெருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அன்னையின் திருத்தேர் மந்திரிக்கப்பட்டு வீதிகளில் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி தந்தை ஆன்டோ மரியசூசை தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story