என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி-மத்திய மந்திரியிடம் ரங்கசாமி மனு
    X

    மத்திய மந்திரி மான்சுவிக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்த போது எடுத்த படம்.

    காரைக்காலில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி-மத்திய மந்திரியிடம் ரங்கசாமி மனு

    • டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி மான்சுவிக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்தார்.
    • கடந்த 2010 முதல் செயல்பட்டு வரும் புதுவை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ மாணவர்களின் ஆண்டு சேர்க்கை 180 ஆகும்.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி மான்சுவிக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2010 முதல் செயல்பட்டு வரும் புதுவை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ மாணவர்களின் ஆண்டு சேர்க்கை 180 ஆகும். மேலும் இந்தக் கல்லூரி 8 துறைகளில் பட்டமேற் படிப்புகளை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு மேலும் 5 துறைகளில் பட்ட மேற்படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் மிகச் சிறந்த நவீன உள்கட்ட மைப்பு வசதிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த நிறுவனத்தை மருத்துவப் பல்கலைக்கழகமாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த மத்திய அரசின் அனுமதி தரவேண்டும்.

    இதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைப்படி காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி மற்றும் அதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×