search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.13 கோடி கரும்பு நிலுவைத் தொகை   விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை
    X

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்திய காட்சி.

    ரூ.13 கோடி கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை

    • திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது
    • ஆலையைத் திறக்க வேண்டும், ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது.

    ஆலையைத் திறக்க வேண்டும், ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுவை விவசாயிகள் வளர்ச்சி சங்கத்தினர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற முதல்-அமைச்சர், நடவடிக்கை எடுக்கும்படி வேளாண்துறைக்கு உத்தரவிட்டார்.

    வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள ரூ.13 கோடியை, விவசாயிகளுக்கு விரைவாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×