என் மலர்

  புதுச்சேரி

  பச்சைவாழி அம்மன் கோவிலில் தீமிதி விழா
  X

  கன்னியகோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்த காட்சி.

  பச்சைவாழி அம்மன் கோவிலில் தீமிதி விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
  • முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

  புதுச்சேரி:

  பாகூர் தொகுதி கன்னிய கோவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுரை பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.

  முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடை பெற்று வந்தது.

  பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர் மேலும் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து வழிபாடு செய்தனர். பிற்பகல் 12.30 மணிய ளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது. மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

  தீமிதி விழாவில் புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குவிந்து வருகின்றனர்.

  Next Story
  ×