search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாமியாரை தாக்கிய மருமகள்
    X

    கோப்பு படம்

    மாமியாரை தாக்கிய மருமகள்

    • பணம் கொடுத்த தகராறில் மாமியாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை வேல்முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.

    புதுச்சேரி:

    உறவினர் திருமணத்துக்கு நகை அடகு வைத்து பணம் கொடுத்த தகராறில் மாமியாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வேல்முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பானுமதி (வயது67). இவர்களது மகன் கோபிநாத் (45). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் கோபிநாத்துக்கு பானுமதி தனது தம்பி ஜெயக்குமாரின் மகளான ஜெயந்தியை 2-வது திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே ஜெயந்தி தனது தம்பி முரளிதரன் திருமணத்துக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் பானுமதி தனது நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் கொடுத்திருந்தார். அதன் பிறகு ஜெயந்தி ஒரு ஆண்டுக்கு பின் கணவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் முரளிதரன் மற்றும் உறவினர்களுடன் பானுமதி வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த பானுமதியிடமும் கோபிநாத்திடமும் அவர்கள் நாங்கள் நகையை திருப்பி கொடுத்து விட்டோம் என்று கூறி பிரச்சினை செய்தனர்.

    மேலும் ஜெயந்தி மாமியார் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் தாக்கினார். பின்னர் பானுமதியை பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்து கையில் காயமடைந்தார். மேலும் ஜெயந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை தாக்கினர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த பானுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×