என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
    X

    கோப்பு படம்.

    கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

    • திருபுவனையில் கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கொரோனா காரணமாக விபூஷணன் வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனையில் கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் கிழக்கு மணவெளி வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது இளைய மகன் விபூஷணன்(வயது38). இவருக்கு திருமணமாகி ஜெய என்ற மனைவி யும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. என்ஜினீயரான விபூஷணன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே கொரோனா காரணமாக விபூஷணன் வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார். பல இடங்களில் சென்று வேலை தேடியும் விபூஷணனுக்கு சரியான வேலை அமைய வில்லை. இதனால் அவருக்கும் அவரது மனைவி ஜெயக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படும். அதன்பிறகு இருவரும் சமாதானம் ஆகி விடுவார்கள்.

    இந்த நிலையில் வேலை இல்லாததால் விபூஷணன் தனது மனைவி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இரவு இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஜெய தனது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது திடீரென விபூஷணன் சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை கண்டதும் ஜெயயும் மற்றும் விபூஷணன் தந்தை பெருமாளும் கோணி சாக்கை தண்ணீரில் நனைத்து தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் விபூஷணனை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அதிகாலை சிகிச்சை பலனின்றி விபூஷணன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×