என் மலர்
புதுச்சேரி

வீரர்கள் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்து பரிசு பெற்ற காட்சி.
புதுவை வீரர்கள் பதக்கங்கள் குவித்து சாதனை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
- சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி:
சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இவர்கள் 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். புதுவைக்கு திரும்பிய வீரர்கள் முன்னாள் துணைசபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஞானசேகரன், பழனிராஜ், புருஷோத்தமன் மற்றும் அணி நிர்வாகிகள் ரகுநாதன், முருகானந்தம், லோகேஷ், ரவிக்குமார், சந்தோஷ், பொற்செல்வன் மற்றும் பயிற்சியாளர்கள் தனசேகரன், அஸ்வின், கிருபைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






