என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி மனு அளித்த காட்சி.
சட்ட சபை கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் ரங்கசாமியிடம் பா.ம.க. மனு
- புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் இன்று புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
- இதனை கருத்தில் கொண்டு வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தி வருகிறோம். தற்போது புதுவை மாநிலத்தில் அதிக அளவில் ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் எத்தனையோ பேர் தற்கொலை முடிவை எடுத்து கொள்கிறார்கள். மேலும் இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்ப தோடு பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க சட்டம் இயற்ற வேண்டும். இதனை உடனடியாக பரிசீலித்து ஆன்லைன் சூதாட்டத்தை புதுவையில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.






