என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் சட்டமன்றம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி:

    பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் சட்டமன்றம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

     6-வது நாள் போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன் மற்றும் குணா, கோவர்த்தனன்,பிரபு, ஏழுமலை, அமுதா , சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டார்கள். 60 மாதம் சம்பளம் இல்லாமல் வறுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த 21 பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

    இருக்கும் தொழி–லாளர்களையும் சாக–விடாமல் அரசு காப்பாற்ற வேண்டும். 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.

    தீபாவளி பஜார் மானியத்தொகை ரூ.62 லட்சத்தை வழங்க வேண்டும். பாப்ஸ்கோ மதுபான உரிமத்தை தனியாருக்கு வழங்கி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • வில்லியனூர் தொகுதியில் உள்ள மணவெளி தண்டுக்கரை இணைப்பு பாலம், தாங்கள்பாலம், பொறையாத்தம்மன் பாலம் ஆகிய 3 பாலங்கள் சுமார் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது.
    • ஆய்வின்போது விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் உள்ள மணவெளி தண்டுக்கரை இணைப்பு பாலம், தாங்கள்பாலம், பொறையாத்தம்மன் பாலம் ஆகிய 3 பாலங்கள் சுமார் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது.

    பாலம் அமைக்கும் பணிகளை எதிர்க்கட்சி தலைவர் சிவா மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கையின்படி பாலத்தை அமைத்துத்தரும்படி அதிகாரிகளிடம் சிவா வலியுறுத்தினார்.

    ஆய்வின் போது செயற்பொறியாளர் சுந்தர்ராஜி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் வாசு, தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதி திராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தொகுதி துணை செயலாளர் குலசேகரன், வர்த்தக அணி முருகையன், ரமணன், ரபீக், திலகர், திருவேங்கடம், பாலு, வீரா, காளி, மிலிட்டரி முருகன், சிலம்பு, சுப்பிரமணி, ரமேஷ், பாலா ஆகியோர் உடன் இருந்தனர்.

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு வரதராஜா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயசித்ரா அரியாங்குப்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் விபத்தில் சிக்கி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால் பகுதியில் எரிச்சல் அதிகரித்ததால் அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் வலி குறையாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் ஜெயசித்ரா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் இருந்தார். ஜெயசித்ரா கணவருக்கு போன் செய்த போது அவர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் மீண்டும் போன் செய்து பார்த்தும் ராஜேந்திரன் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெயசித்ரா ஓடைவெளியில் வசிக்கும் தனது மகள் சாந்தலட்சுமிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

    அதன்படி சாந்தலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தந்தை ராஜேந்திரன் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 3-க்கு உட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில் இடத்திற்கும் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்புக்கு உட்பட்ட சின்ன எல்லையம்மன் கோவில் இடத்திற்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்குமாறு ஆணையர் சிவசங்கரை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
    • நிதி உதவியினை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கோவில்களுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 3-க்கு உட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில் இடத்திற்கும் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்புக்கு உட்பட்ட சின்ன எல்லையம்மன் கோவில் இடத்திற்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்குமாறு ஆணையர் சிவசங்கரை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    பின்னர் ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை மற்றும் கோவில் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் தடை–யில்லா சான்றிதழ் அளிப்பதற்கான ஆவ–ணங்களை செய்து கொடுக்கும்படி எம்.எல்.ஏ. அறிவுறுத்திருந்தார், அதனைத் தொடர்ந்து ஒரு கால பூஜைக்கு நிதி உதவியினை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கோவில்களுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.

    இதில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய–ராஜ், கிளை செயலாளர் செல்வம், தப்பு, பாலாஜி, ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிஷா மீதி சீட்டு பணம் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை கேட்ட போது ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து விட்டதாக லோகேஷ் தெரிவித்தார்.
    • புதுவையில் மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ.7.80 லட்சம் சீட்டு பணம் மோசடி செய்த அண்ணன்-தம்பி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி நிஷா (வயது63). இவர் அருகில் உள்ள அருந்ததி நகரை சேர்ந்த லோகு என்ற லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணி என்ற மணிகண்டன் ஆகியோர் நடத்திய ஏலச்சீட்டில் தனது பெயரில் ரூ.2லட்சம் வீதம் 2 சீட்டும், தனது மகன் இதயதுல்லா பெயரில் ரூ.2லட்சம் வீதம் 2 சீட்டும் கட்டி வந்தார். மொத்தம் 40 பேர் இதில் பணம் கட்டி வந்தனர். நிஷா தனது பெயரிலும், மகன் பெயரிலும் கட்டி வந்த ஏலச்சீட்டு பணத்தை கடைசியாக எடுத்துகொள்ள முடிவு செய்து பணத்தை செலுத்தி வந்தார்.

    இதில் அனைவரும் சீட்டு தொகையை பெற்று விட்ட நிலையில் நிஷா 4 சீட்டுக்கான தொகையை லோகேசிடம் கேட்டார். அப்போது லோகேஷ் ரூ.20 ஆயிரத்தை நிஷாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றுக்கொண்டார். மீதி தொகையை கேட்ட போது சில நாட்களில் கொடுத்து விடுவதாக லோகேஷ் உறுதி அளித்தார். ஆனால் சில மாதங்கள் கடந்தும் லோகேஷ் மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் நிஷா மீதி சீட்டு பணம் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை கேட்ட போது ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து விட்டதாக லோகேஷ் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நிஷா தான் ரூ.6 லட்சம் பெறவில்லை என்று லோகேசிடம் கூறிய போது லோகேஷ் நிஷா கையெழுத்திட்டிருந்த நோட்டு புத்தக்தை காட்டினார். அதில் ரூ.20 ஆயிரத்துக்கு முன்பு 6 எண் நம்பரை சேர்த்து ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் பெற்றதாக எழுதி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டனிடம் நிஷா தட்டிக்கேட்ட போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி உன்னை அடித்து போட்டால் கேட்க ஆள் இல்லை. இங்கேயே வெட்டி புதைத்து விடுவோம். கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி விடு. இல்லையென்றால் இந்த ஊரிலேயே நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று இருவரும் மிரட்டினர். நிஷாவின் மகன் இதயதுல்லாவும் பலமுறை கேட்டும் அவர்கள் சீட்டு பணத்தை கொடுக்கவில்லை.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த நிஷா நூதன முறையில் சீட்டு பணத்தை மோசடி செய்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார்.
    • எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 1½ ஆண்டாகியும், பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இதுவரை வாரிய தலைவர் பதவிகள் வழங்கவில்லை.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு, ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கும் வாரிய பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பா.ஜனதா மேலிட தலைமையில் இருந்தும் வாரிய பதவி வழங்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் இதுவரை வாரிய பதவி வழங்காதது பா.ஜனதா எம்.எல்.ஏக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிப்பட்டது. சட்டசபையில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தார். தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    மத்திய அரசு திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதோடு, தங்கள் தொகுதிகளில் கோவில் கமிட்டி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை தங்களிடம் கேட்காமல் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் புகார் கூறினர்.

    அமைச்சரவை கூட்டமும் நடத்துவதில்லை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகூட்டத்தையும் நடத்த முன்வரவில்லை என குற்றம்சாட்டினர். அமைச்சர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என கூறினார்.

    ஏற்கனவே 2, 3 முறை புகார் கூறியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனாலும், புதுவைக்கு வரும் மத்திய மந்திரி எல்.முருகனுடன் மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதோடு அடுத்த வாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லிக்கு சென்று பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது புதுவை அரசு, அரசியல் குறித்து பேச முடிவெடுத்துள்ளனர்.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

    கடந்த 6-ந் தேதி இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது தட்பவெட்ப நிலை காரணமாக படகு முல்லை தீவு பகுதியில் ஒதுங்கியது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் படகுடன் கைது செய்தனர்.

    இவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கோர்ட்டு உத்தரவுபடி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுபற்றி புதுவை மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    புதுச்சேரி:

    கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மோகனபிரியா(வயது29). பி.டெக் பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கும் காராமணிக்குப்பம் பூந்தோட்டம் வீதியை சேர்ந்த செந்தில்குமாருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மோகனபிரியாவுக்கு அவரது பெற்றோர் 15 பவுன் நகையும், மாப்பிள்ளை செந்தில்குமாருக்கு 3½ பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்கள் வாங்க ரூ.1லட்சத்து 30 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை வழங்கினர்.

    அதன்பிறகு ஆடி வரிசைக்கு 4 கிராம் நகையும் செய்தனர். அதன் பின்னர் கூடுதல் நகை கேட்டு மோகனபிரியாவை கணவர் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்தனர்.

    மேலும் மோகன பிரியாவின் கல்வி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் மோகனபிரியா தனது வங்கி கணக்கில் இருந்தும், தனது தந்தை வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை கல்வி கடன் செலுத்தினார்.

    ஆனாலும் வேலைக்கு ஏதுவும் செல்லாத செந்தில்குமார் தொடர்ந்து மோகனபிரியாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில்குமாரும், அவரது தந்தை ராஜமாணிக்கம் மற்றும் உறவினர்களும் சேர்ந்து தொடர்ந்து மோகனபிரியாவை வரதசட்ணை கொடுமை செய்து வந்ததால் அவர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • அசோகன் கன்னிய கோவிலில் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு சென்றதால் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூங்கச் சென்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர் அருகே பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அசோகன் (68). கூலித் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று இரவு அசோகன் கன்னிய கோவிலில் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு சென்றதால் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூங்கச் சென்றார்.

    இன்று காலை அசோகன் வழக்கம் போல் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அசோகன் பாகூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்கமாக வந்து கதவை உடைத்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும், அதே பகுதியில் உள்ள உமாநாத் (65), மற்றும் சவுத்ரி ஆகியோரின் 2 வீடுகளில் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளனர். பீரோவில் பணம் - நகை இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் இணைப்பு சாலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து வில்லியனூர் வடக்கு மாட வீதி வரை பழுதடைந்துள்ள யூ வடிவ வாய்க்காலை ரூ.43 லட்சம் செலவில் மறு கட்டமைக்கவும், வில்லியனூர் மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜி, உதவி பொறியாளர் சீனுவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்யநாராயணன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • நேருவீதியில் ஊர்வலமாக வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    தி.மு.க. எம்.பி. ராசா மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பா.ஜனதா, இந்து முன்னணி தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. போராட்டங்கள் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் புதுவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சிலை அருகே மனுதர்ம சாஸ்திரம் கொளுத்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், பொதுச்செயலர் இளங்கோவன், திராவிடர் விடுதலைக்கழகம் அய்யப்பன், தமிழர் களம் அழகர் உள்பட பலரும் காமராஜர் சிலை அருகே கூடினர்.

    போலீசாரும் அங்கு வந்து மனுதர்ம சாஸ்திரத்தை எரித்தால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர். போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் பாலாஜி திரையரங்கு அருகே ஒன்று கூடினர். நிர்வாகிகள் சனில்குமார், முருகையன், பா.ஜனதா பொதுச்செயலர் ரவிசந்திரன், பட்டியலின தலைவர் தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் கூடினர். பின்னர், ஊர்வலமாக காமராஜ் சிலை நோக்கி வந்தனர்.

    அப்போது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு தர்ம சாஸ்திரத்தை கிழித்தனர். அதையடுத்து அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

    அப்போது அங்கு வந்த இந்து முன்னனி- பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் எதிர் எதிராக கோஷம் எழுப்பினர்.

    ஒரு கட்டத்தில் செருப்பையும், கற்களையும் இருதரப்பினரும் மாறி மாறி வீசினர். இதில் இந்து முன்னணி நிர்வாகி முருகையன் காயம் அடைந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் குமார் மேல் மற்றொரு கல் விழுந்தது.

    அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வேனின் பின்பக்க கண்ணாடியும் கல்வீச்சில் உடைந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    இந்துமுன்னணியினர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நேருவீதியில் ஊர்வலமாக வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் புதுவையில் இன்று பரபரப்பு நிலவியது.

    • புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் இயக்க அலுவலகத்தில் நடந்தது.
    • சக்திவேல் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடக்கவுரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் இயக்க அலுவலகத்தில் நடந்தது. சக்திவேல் வரவேற்புரையாற்றினார்.

    பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடக்கவுரையாற்றினார். பி.போல்டு அமைப்பின் பஷீர் அகமது சிறப்புரையாற்றினார். அம்பேத்காரும், பெரியாரும் என்ற தலைப்பில் முத்துக்கண்ணு கருத்துரையாற்றினார். முடிவில் சூரிமுத்து நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×