என் மலர்
நீங்கள் தேடியது "Jewelery money"
- ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அசோகன் கன்னிய கோவிலில் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு சென்றதால் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூங்கச் சென்றார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர் அருகே பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அசோகன் (68). கூலித் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று இரவு அசோகன் கன்னிய கோவிலில் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு சென்றதால் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூங்கச் சென்றார்.
இன்று காலை அசோகன் வழக்கம் போல் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அசோகன் பாகூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்கமாக வந்து கதவை உடைத்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள உமாநாத் (65), மற்றும் சவுத்ரி ஆகியோரின் 2 வீடுகளில் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளனர். பீரோவில் பணம் - நகை இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






