search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தந்தை பெரியார் தி.க - இந்து முன்னணி மோதல்
    X

    புதுவையில் தந்தை பெரியார் தி.க - இந்து முன்னணி மோதல்

    • இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • நேருவீதியில் ஊர்வலமாக வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    தி.மு.க. எம்.பி. ராசா மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பா.ஜனதா, இந்து முன்னணி தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. போராட்டங்கள் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் புதுவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சிலை அருகே மனுதர்ம சாஸ்திரம் கொளுத்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், பொதுச்செயலர் இளங்கோவன், திராவிடர் விடுதலைக்கழகம் அய்யப்பன், தமிழர் களம் அழகர் உள்பட பலரும் காமராஜர் சிலை அருகே கூடினர்.

    போலீசாரும் அங்கு வந்து மனுதர்ம சாஸ்திரத்தை எரித்தால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர். போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் பாலாஜி திரையரங்கு அருகே ஒன்று கூடினர். நிர்வாகிகள் சனில்குமார், முருகையன், பா.ஜனதா பொதுச்செயலர் ரவிசந்திரன், பட்டியலின தலைவர் தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் கூடினர். பின்னர், ஊர்வலமாக காமராஜ் சிலை நோக்கி வந்தனர்.

    அப்போது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு தர்ம சாஸ்திரத்தை கிழித்தனர். அதையடுத்து அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

    அப்போது அங்கு வந்த இந்து முன்னனி- பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் எதிர் எதிராக கோஷம் எழுப்பினர்.

    ஒரு கட்டத்தில் செருப்பையும், கற்களையும் இருதரப்பினரும் மாறி மாறி வீசினர். இதில் இந்து முன்னணி நிர்வாகி முருகையன் காயம் அடைந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் குமார் மேல் மற்றொரு கல் விழுந்தது.

    அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வேனின் பின்பக்க கண்ணாடியும் கல்வீச்சில் உடைந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    இந்துமுன்னணியினர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நேருவீதியில் ஊர்வலமாக வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் புதுவையில் இன்று பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×