என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை ஜிப்மர் மருத்துவ மனையின் செயல்பாடுகள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
    • தோடு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளி களையே மருந்துகளை வாங்கி வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ மனையின் செயல்பாடுகள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையில் நோயாளிகளுகான வசதிகள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளி களையே மருந்துகளை வாங்கி வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

    இதை அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் விமர்சித்து நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார் செய்யப்பட்டது.

    அவரும் புதுவைக்கு வந்து ஜிப்மரை ஆய்வு செய்தார். இத்தகைய சூழலில் ஜிப்மர் மருத்துவமனையில், இருப்பு உள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என டாக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் செல்கிறார்.

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 62, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 594, காரைக்காலில் 74 பேர் என 730 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

    குழந்தைகள் நல பிரிவில் அரசு மருத்துவமனையில் 42, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 145, காரைக்காலில் 13 பேர் என 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதவிர பெரியவர்கள் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • புதுவை குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்.
    • போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். நிரந்தர சம்பளத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    7-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் உணவு செய்ய இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் காலி சிலிண்டர், காலி பாத்திரங்களுடன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளனம் ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை உருளை யன்பேட்டை மங்க லட்சுமி நகரில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
    • சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை மங்க லட்சுமி நகரில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் இந்த ஆண்டு( 2022) 72 மாணவ-மாணவிகளுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 68 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சங்கீதா, பிரியங்கா, கிஷோர், தீபா ஆகிய 4 மாணவர்கள் பள்ளி அளவில் முதல் 4 இடங்களை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவ-மாணவிகளின் கடின உழைப்பைப் பாராட்டி ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தன தியாகு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

    ஆல்பா பள்ளியில் நீட் சிறப்பு வகுப்பிற்காக அந்தந்த துறை நிபுணர்கள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆல்பா பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாட பிரிவின் அடிப்படையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    • திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மது விலையை விட கஞ்சா குறைந்த விலைக்கு கிடைப்பதால் இளைஞர்கள் கஞ்சாவை வாங்கி புகைத்து போதையில் திளைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி சமூக விரோதிகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள்.

    மது விலையை விட கஞ்சா குறைந்த விலைக்கு கிடைப்பதால் இளைஞர்கள் கஞ்சாவை வாங்கி புகைத்து போதையில் திளைக்கின்றனர். இதனை கட்டுப்படுத்துவதோடு கஞ்சா விற்பவர்களை கடுமையான சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதன்படி போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    காலாப்பட்டு பகுதியில் பல்கலைக்கழக மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த 3 வாலிபர்களை காலாப்பட்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் திருக்கனூர் அருகே சோம்பட்டு ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர் 300 கிராம் கஞ்சாவை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன்(வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சனை போலீசார் கைது செய்தனர்.

    • கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ரத்த சோகை வாகன விழிப்புணர்வு தொடக்க விழா கோட்டகுப்பம் நகராட்சி வளாகத்தில் நடந்தது.
    • வட்டார திட்ட உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ரத்த சோகை வாகன விழிப்புணர்வு தொடக்க விழா கோட்டகுப்பம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. வாகன பேரணியை நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    பேரணி ஈ.சி.ஆர் சாலை, மகாத்மா காந்தி சாலை, பழைய பட்டினம் பாதை, சின்ன கோட்டகுப்பம், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலிச்சாவடி, தந்திராயன் குப்பம், நடுக்குப்பம், சோதனைக்குப்பம், பெரிய முதலாச்சாவடி வரை சென்று பேரணி அடைந்தது. பேரணியில் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத்பீவி முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், ஸ்டாலின் சுகுமார், சண்முகம், ஆதிலட்சுமி பாஸ்கர், கோட்டகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி தேசப்பன், வட்டார வளர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாஜிதா பேகம், மேற்பார்வையாளர் செல்வி, பூங்கோதை, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், வட்டார திட்ட உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.

    இதில், கோவை லீ ராயல் மெரிடியன் 5 நட்சத்திர ஒட்டலின் சார்பில் மனிதவள மேலாளர் சுகந்தி கவுதம் மற்றும் உணவு தயாரிப்பு உபசரிப்பு துறை மேலாளர் ரிஷப் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மேற்பார்வையில் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்தி–ருந்தனர்.

    • திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பள்ளியின் துணை முதல்வா கலாவதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற தாவரவியல் விரிவுரையாளர் ரோஸ் வீணவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பள்ளி மாணவிகள் செய்திருந்த அறிவியல் படைப்புக்களை விரிவுரையாளர்கள் கலியமூர்த்தி, திருநாராயணன், ஜீவராஜீ, மரியராஜ்குமார் மற்றும் பட்டதாரி ஆசிரியைகள் தனபாக்கியம், விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார். அறிவியல் விரிவுரையாளர்கள் தனலட்சுமி, பபியோலா, நற்சோனை மற்றும் ஆசிரியர்கள், சிவக்குமார், ராஜராஜேஸ்வரி, மணி–மொழி, ஜாக்குலின், சிவப்பிரியா, விஜய–லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடைபயணம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை சார்பில் கடற்கரை சாலையில் கார்கில் நினைவிடத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது.
    • மருந்தியல் துறை தலைவர் டாக்டர் இசபெல்லா, பேராசிரியர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    தேசிய மருந்தியல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மருந்து பாதுகாப்பு அதனால் ஏற்படும் ஒவ்வாமை அதன் பக்கவிளைவுகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடைபயணம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை சார்பில் கடற்கரை சாலையில் கார்கில் நினைவிடத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது.

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.மருந்தியல் துறை தலைவர் டாக்டர் இசபெல்லா, பேராசிரியர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை தலைவர் டாக்டர் லூர்து ஜெப்ரின்கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மருந்தியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முடிவில்டாக்டர் ஷில்பா நன்றி கூறினார்.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் மீது புகார் செய்துள்ளனர்.
    • எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை?

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்துகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினர். இதில் தொகுதி வளர்ச்சி பணிகள் நடை பெறவில்லை எனவும், பா.ஜனதா

    எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் மீது புகார் செய்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை? தெம்பும், திராணியும் இருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து வெளியேற வேண்டியதுதானே? பா.ஜனதாவினர் சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது. இது பா.ஜனதாவின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.

    பா.ஜனதா, இந்து முன்னணி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவ ணன்குமார் காரைக்காலுக்கு சென்றபோது தகுதியில்லாத, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள 200 பேருக்கு சிகப்பு ரேஷன்கார்டை வழங்கியுள்ளார்.

    ஆனால் ஆயிரக்க ணக்கான ரேஷன்கார்டு மாற்றக்கோரும் விண்ண ப்பங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறையில் தூங்குகிறது.

    தகுதியில்லாதவர்களுக்கு வழங்கியதை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மீது பா.ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர். அதி காரிகளை ஆர்.எஸ்.எஸ்.

    நிர்வாகிகள் மிரட்டு கின்றனர். இதற்கு காரணம் ரவுடிகளும், கொலையாளிகளும் பா.ஜனதாவில் சேர்ந்தி

    ருப்பதுதான். கட்சிமாறி களுக்குத்தான் பா.ஜனதா

    வில் பதவி வழங்கப் பட்டுள்ளது. உண்மையாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அனுமதி பெற்று நடத்திய போராட்டத்தில் திடீரென இந்து முன்னணியினர் நுழைந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ேபாலீசாரிடம் எப்படி போராட்டத்துக்கு அனுமதியளித்தீர்கள்? என கேட்டு மிரட்டுகிறார். சபாநாயகர் நடுநிலை வகிக்க வேண்டும்.

    அரசியல் செய்ய விரும்பினால் பதவி விலகி அரசியலுக்கு வரவேண்டும். அவர் தொடர்ந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும்.

    வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்ட உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீரை காய்ச்சிக்குடிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

    இதுவரை கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவில்லை. கவர்னர் நடமாடும் மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கை குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆஸ்பத்திரி

    களில் நிற்பது வேதனைய ளிக்கிறது. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    தாய்லாந்து, மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு

    நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுற வுத்துறை மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன். பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த காங்கிரசாரின் கருத்து. இதை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காலாப்பட்டு அருகே பல்கலைக்கழக-சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
    • காலாப்பட்டு போலீசார் போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமை யிலான குழுவினருடன் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பல்கலைக்கழக-சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரியும் ஒரு பெண் தனது கணவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், அவருக்கு சிலர் மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து காலாப்பட்டு போலீசார் போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமை யிலான குழுவினருடன் விசாரணை நடத்தினர்.

    அப்போது டாக்டரின் கணவருக்கு காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான புத்துப்பட்டில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த நிரோஜான் என்பவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிரோஜானை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவருடன் அதே அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் அகிலன் ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக 5 கிராம் கஞ்சா ரூ.500-க்கு விற்று வந்ததும், இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சட்டகல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களை கஞ்சா பழக்கத்துக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • வில்லியனூரில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வில்லியனூரில் உள்ள ராம்பரதேசி சித்தர் கோவில் மற்றும் வில்லியனூர் ரெயில் நிலையத்துக்கு சென்று வருவது வழக்கம்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாண பாண்டியன்(வயது75). இவருக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அவர் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

    கார் டிரைவராக வேலை செய்து வந்த கல்யாணபாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக அந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் அவ்வப்போது வில்லியனூரில் உள்ள ராம்பரதேசி சித்தர் கோவில் மற்றும் வில்லியனூர் ரெயில் நிலையத்துக்கு சென்று வருவது வழக்கம்.

    அதுபோல் கல்யாணபாண்டியன் வீட்டில் சாப்பிட்டு சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த நிலையில் 3¼ மணிக்கு கல்யாணபாண்டியனின் மனைவி கமலாவுக்கு ஒருவர் போன் செய்து பேசினார். அப்போது கல்யாணபாண்டியன் ரெயிலில் அடிப்பட்டு கிடந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கமலா உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணபாண்டியன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கல்யாணபாண்டியன் புதுவை-திருப்பதி ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி கமலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×