என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க பாகூர் திருமூலநாதர் நகரில் ரூ.18 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கவும், மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் முதல் பள்ளக்ககொரவள்ளிமேடு வரை சாலை அமைக்க ரூ. 7 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும், மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கமலா நேரு திருமண மண்டபத்திற்கு வாகனம் நிறுத்தம் அமைக்க ரூ. 7 லட்சத்து 58 ஆயிரம் செலவிலும், பாகூர்பேட் புது நகரில் கோனா மதகு வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.19 லட்சத்து 77 ஆயிரம் செலவிலும், காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர், மாரியம்மன் கோவில் வீதியில் சாலை அமைக்க ரூ.23 லட்சத்து 7 ஆயிரம் செலவிலும், கொரவள்ளிமேடு வடக்குத்தெரு வண்ணாகுளம் புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதியிலிருந்து குருவிநத்தம் பெரியார் நகர் குடிநீர் தொட்டியை ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்திற்கு புதுப்பித்தல் பணிக்கு திட்டமிடப்பட்டது. திட்டப்பணிகான மொத்த மதிப்பு ரூ.1கோடியே 7லட்சமாகும். இதற்கான பணிகளை தொடங்க பூமி பூஜை அந்தந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பிரதீப், புனிதவதி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள்.
    • இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையும், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும் இணைந்து மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் உமன்ஸ் செல் பெண்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார். 

    சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவ னத்தின் தமிழ்(இயற்க்கை) மருத்துவ ஆய்விருக்கையின் பொறுப்பாளரும், தி சுசான்லி குழுமத்தின் இணை சேர்மனும் பேராசிரியை டாக்டர் உஷாரவி மற்றும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சிறுதானியங்கள் குறித்த மருத்துவ பயன்கள், கருப்பைக்கு பலன் தரும் சிறுதானியங்கள், ஞாபக சக்தி, தோல் பாதுகாப்பு, முடி பாதுகாப்பு, போன்றவற்றி ற்கான சிறுதானியங்கள் குறித்து டாக்டர் ரவி பேசினார்.

    பேராசிரியை டாக்டர் உஷாராணி சிறு, குறு உடல் உபாதைகளுக்கு மிகச்சரியான இயற்கை மருத்துவ முறைகளையும் மருந்து, மாத்திரையின்றி அக்குபிரஷர் மூலமாக தீர்வளிக்கும் அக்குபிரஷர் புள்ளிகளை கற்றுக்கொடுத்தார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு டாக்டர் கல்பலதா சால்வை அணிவித்தார். ஹெர்பல் கேர் நிறுவனத்தின் பேராசிரியர் சக்திவேல் கே.என்.சி. கல்லூரியின் டாக்டர்கள் அமுதவல்லி, ஸ்ரீதேவி, சுமதி, மற்றும் காதாம்பரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக பயன் பெற்றனர்.

    • அடுத்தடுத்த நாட்களில் 2 பந்த் போராட்டங்களை புதுவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து தமிழகம், புதுவையில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதேநேரத்தில் தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் உட்பட பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதுவையில் நேற்று முன்தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டத்தின்போது இந்து முன்னணி அமைப்பினருடன் மோதல் ஏற்பட்டது.

    இதில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 42 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து புதுவையில் வருகிற 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம்(பந்த்) நடைபெறும் என இந்து முன்னணி நேற்று முன்தினம் அறிவித்தது. பல்வேறு சங்கங்களை சந்தித்து அவர்கள் ஆதரவும் திரட்டி வருகின்றனர்.

    இதனிடையே நேற்று பெரியார் இயக்கங்கள் மற்றும், அம்பேத்கர் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம்(பந்த்) அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை ஏற்றம், புதுவைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் துரோகம், மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களில் 2 பந்த் போராட்டங்களை புதுவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் 2 நாட்கள் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது புதுவை வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    அதோடு புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் கடந்த ஒரு வாரமாக அரசு, தனியார் பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அப்போது காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவித்தபடி 2 நாட்கள் பந்த் நடந்தால் மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதில் பாதிப்பு ஏற்படும் என மாணவர்களும், பெற்றோர்களும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    • மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
    • மருத்துவமனை கண்காணி ப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மணக்குள விநாயகர் கல்வி நிறுவன செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே,கார்த்திகேயன், கலைச்செல்வன் மற்றும் மருத்துவமனை கண்காணி ப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மனநலத்துறை தலைவர் டாக்டர் அருண் வரவேற்றார். மனநலத்துறை பேராசிரியர் அசோக்குமார் "தற்கொலையின் காரணம், எச்சரிக்கை அறிகுறி" என்ற தலைப்பிலும் மற்றும் பேராசிரியர் அருள்சரவணன் "தற்கொலை தடுப்பு முறைகள்" என்ற தலைப்பிலும் சிறப்புரை யாற்றினார்கள்.

    விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதுவை சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
    • புதுவை சட்டப்பேரவை வாயிலிருந்து புறப்பட்ட பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதுவை சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.

    புதுவை சட்டப்பேரவை வாயிலிருந்து புறப்பட்ட பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுகாதாரதுறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் துறை அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் சமுதாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவி பங்கேற்ற பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கம்பன் கலையரங்கில் நிறைவு பெற்றது.

    • புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
    • அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக் பாபு டெல்லி சென்றுள்ளார். அங்கு, அவர் பா.ஜனதா அமைப்பு செயலாளர் சந்தோஷை, அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.

    மேலும், புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துமாறு அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் சந்தோஷ் அறிவுறுத்தினார்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    எம்.எல்.ஏ. போராட்டம் குறித்து தகவலறிந்த அவரின் ஆதரவாளர்கள் திருபுவனை தொகுதியிலிருந்து சட்டசபை முன்பு குவிய தொடங்கினர். இதையடுத்து சட்டசபையின் இருபுறமும் போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இருப்பினும் சட்டசபை முன்பு திரண்ட ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் திருபுவனை தொகுதியை புறக்கணிக்காதே, பா.ஜனதா வளர்ச்சியை தடுக்காதே என குறிப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிகுந்த அரிக்கன்கமேடு பகுதியில் தூய்மை பணியை நடத்தியது.
    • தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதி களில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிகுந்த அரிக்கன்கமேடு பகுதியில் தூய்மை பணியை நடத்தியது.

    இதன் தொடக்க விழாவில் சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை அரிக்கன்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதி களில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பசுமை சூழலுக்கான ஸ்வச்சதா பக்வாடா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    தூய்மை பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

    • புதுவை பாரதிதாசன் கைப்பந்து கழகம் சார்பில் தெற்கு மண்டல சுழற்கோப்பைக்கான 43-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி தொடங்கிய 3 நாட்கள் அரியாங்குப்பம் பாரதிதாசன் திடலில் நடைபெற உள்ளது.
    • ஆண்கள் பிரிவில் 3-ம் இடமும் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடமும் பிடிக்கும் அணிகளுக்கான பரிசு தொகையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் கைப்பந்து கழகம் சார்பில் தெற்கு மண்டல சுழற்கோப்பைக்கான 43-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி தொடங்கிய 3 நாட்கள் அரியாங்குப்பம் பாரதிதாசன் திடலில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றன.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.60 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.45 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது. சபணகள் பிரிவில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும். ஆண்கள் பிரிவில் 3-ம் இடமும் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடமும் பிடிக்கும் அணிகளுக்கான பரிசு தொகையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    அதற்கான காசோலையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, பாரதிதாசன் கைப்பந்து கழகத்திடம் வழங்கினார்.

    இதில் துணை நிறுவனர் பெருமாள், பொருளாளர் ராஜாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் புதுவை சேர்ந்த அணிகளுக்கான சீருடை, உபகரணங்களை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்கியது.

    • தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
    • லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

    லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பராசக்தி ஆன்மீக இயக்க முன்னணி நிர்வாகிகள் வள்ளி, வெண்ணிலா, மணிமேகலை, வசந்தா, கல்விக்கரசி, மீனா, மகாலட்சுமி, ஜெயா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணி அய்யனார் கோவில் வரை சென்றது. அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராசா எம்.பி. படத்தை கிழித்து வீசினர்.

    • புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
    • போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.

    இதனிடையே சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அவர் 12.30 மணிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளனை அழைத்து பேசினார். அப்போது அங்காளன், தனது தொகுதியில் பரிந்துரை இல்லாமல் போடப்பட்ட அனைத்து கமிட்டிகளையும் கலைக்க வேண்டும்.

    புதிதாக தனது பரிந்துரையின்படி கமிட்டிகளை போட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கவர்னர், முதல்-அமைச்சரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். முடிவு தெரியும்வரை நான் போராட்டத்தை தொடர்வேன் என்று கூறிய சுயேச்சை

    எம்.எல்.ஏ. அங்காளன் மீண்டும் சட்டசபை வளாக நுழைவுவாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    அவருடன் இருந்த நிர்வாகிகளை அமரவேண்டாம் என கூறி அங்களான் எம்.எல்.ஏ. தனியாக அமர்ந்தார்.

    சபாநாயகருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×