என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.
    • இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அத்துடன் முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது.

    ஆனால் புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும்  தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

    • நயினார் மண்டபத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்பத்தை நடத்துவதற்காக சுதர்கனி நயினார் மண்படத்தில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறர்.

    புதுச்சேரி:

    நயினார் மண்டபத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை நயினார் மண்டபம் பிரிதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாண்டியன்(வயது53). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுதர்கனி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் விபத்தில் சிக்கி விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் பாண்டியன் வீட்டில் இருந்து வந்தார். குடும்பத்தை நடத்துவதற்காக சுதர்கனி நயினார் மண்படத்தில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறர்.

    இதற்கிடையே பாண்டியன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை செய்வார். அதுபோல் பாண்டியன் மனைவியிடம் டிபன் கேட்டார். அதற்கு சுதர்கனி சாதமும், புதினா சட்னியும் உள்ளதால் அதை எடுத்து சாப்பிடுமாறு கூறி விட்டு வெளியே சென்றார். அப்போது பாண்டியன் ஓட்டலுக்கு சென்று பொங்கல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டார்.

    சுதர்கனி எதிர்வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென விரக்தியடைந்த பாண்டியன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த குழந்தைக்கு தொட்டில் கட்ட வைத்திருந்த கயிற்றை எடுத்து தூக்கு போட்டு தொங்கினார். அப்போது வீட்டுக்குள் சென்ற அவரது மகன் அஜித் தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே சுதர்கனி மற்றும் அக்கம் பக்கத்தினர் பாண்டியனை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சுதர்கனி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மடுகரை பகுதியில் டிராக்டர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மடுகரை கரியமாணிக்கம் செல்லும் சாலையின் ஓரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.
    • குப்பைகள் தீ வைத்து கொளுத்தி விடப்படுவதனால் மரங்கள் எரிந்து சாம்பலாவதோடு அருகருகே உள்ள மரங்களும் பட்டு போய் விடுகின்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மடுகரை பகுதியில் டிராக்டர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மடுகரை கரியமாணிக்கம் செல்லும் சாலையின் ஓரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குப்பைகள் தினந்தோறும் தீ வைத்து கொளுத்தப்பட்டு அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி தருகின்றது.

    மடுகரையிலிருந்து தவளகுப்பம் வரை சாலையின் இரு புறங்களிலும் புன்னை புளியமரம், வேப்பமரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    குப்பைகள் தீ வைத்து கொளுத்தி விடப்படுவதனால் மரங்கள் எரிந்து சாம்பலாவதோடு அருகருகே உள்ள மரங்களும் பட்டு போய் விடுகின்றது.

    எனவே கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மரங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தால் ஏனைய மரங்களும் பட்டு போகாமல் தடுக்க முடியும்.

    சேகரிக்கப்படும் குப்பைகளை பஸ் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் கொட்டாமல் அதற்கென்று தனியான ஒரு இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தில் கொட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவேலுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.
    • முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.

    துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் திலகன் வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் ரேணு, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருந்தக மேலாளர் அடைக்கல ஜேசுராஜ் உள்ளிட்ட மருந்தாளர்கள் செய்திருந்தனர். ‌முடிவில் டாக்டர் அலீஸ் கிஸ்கு நன்றி கூறினார்.

    • மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.
    • மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு  பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.

    புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்தது மகாளய பட்ச காலத்தில் பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    இதன் படி புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோரை வேண்டி திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.

    இதே போல் வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, முத்தியால்பேட்டையில் உள்ள செங்குந்தர் மரபினர் பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

    அதே போல் வில்லியனூர் அடுத்த பழமையான திருக்காஞ்சி கெங்கவராகநதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

    • நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் சார்பில் தொடர் இலவச மருத்துவ முகாம் ஓம்வேலன் மற்றும் நியூஓம்வேலன் மருந்தகங்களில் தொடங்கியது.
    • முகாமில் ஒன்றுக்கு மேற்பட்ட டாக்டர்களிடம் ஆலோசனை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுச்சேரி:

    நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் சார்பில் தொடர் இலவச மருத்துவ முகாம் ஓம்வேலன் மற்றும் நியூஓம்வேலன் மருந்தகங்களில் தொடங்கியது. இந்த முகாமை பா.ஜனதா வணிக பிரிவு தலைவர் சத்தியராஜ் தொடங்கி வைத்தார்.

    டாக்டர்கள் பாலமுருகன், வீரமணி, பாலாஜி, கார்த்திகேயன், அபிநயா, ரூபல்சமல், ஸ்ரீகாந்த், சுருதி, மாருதிராவ் ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை நோய், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், பெண்கள் நல ம், காது, மூக்கு, தொண்டை , தோல்வியாதி, பொது நல மருத்துவம் குறித்து பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். முகாமில் ஒன்றுக்கு மேற்பட்ட டாக்டர்களிடம் ஆலோசனை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது.

    • திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையை சேர்ந்தவர் 28 வயது பெண்.இவர் கடந்த 20-ந்தேதி ஆன்லைனில் வேலை தேடினார்.
    • அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார்.

    புதுச்சேரி:

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது மகனை தேடி வருகிறார்கள்.

    புதுவையை சேர்ந்தவர் 28 வயது பெண்.இவர் கடந்த 20-ந்தேதி ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் அயர்லாந்து நாட்டில் பிரபலமான கம்பெனியில் நிர்வாக அதிகாரி பணி வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்படி ரூ.3½ லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அந்த பெண்ணும் அந்த தொகையை அந்த நபரிடம் கொடுத்தார். இதே போல் புதுவையை சேர்ந்த 10 பேர் அந்த நபரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர்.

    பின்னர் அந்த பெண்ணை நேர்காணலுக்கு டெல்லிக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அந்த பெண்ணும் சென்று சென்றார்.ஆனால் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அழைக்கவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த நபர் சரியாக பதில் அளிக்கவில்லை.

    பின்னர் இதுகுறித்து அந்த பெண் புதுவை டி.ஜி.பி மனோஜ்குமார் லாலிடம் புகார் அளித்தார். டி.ஜி.பி உத்தரவின் பேரில் குற்ற புலனாய்வு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு,ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி,ஷியாமளா மற்றும் ஏட்டு முகமத் லியாகத் அலி,சிவசித்தான்,உஷா மற்றும் போலீசார் அருண்குமார், மகினோ,திலீப் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அதன்படி அங்கு விரைந்த தனிப்படை போலீசார் கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த நாகம்மை என்ற பெண்ணை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் போலி வேலைவாய்ப்பு வெப்சைட் மூலம் புதுவையை சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.45½ லட்சம் வரை அவரும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக மோசடி யில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள்,போலி முத்திரைகள்,அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நாகம்மையை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரது மகன் பிரபாகரனை தேடி வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏற்கனவே சென்னை,திருச்சியை சேர்ந்த 25 பேரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பாளர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தற்போதைய புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் தி.மு.க. அமைப்பாளர் சிவா கூறியதாவது:-

    மனு தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியுள்ளது என 50, 60 ஆண்டுகளாக பேசி வருகின்றனர். தபாலை எழுதியவர் மீது கோபப்படாமல், தபாலை படித்தவர் மீது கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

    அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை கூற உரிமையில்லை. அந்த கருத்தை எதிர்க்கவும், கண்டிக்கவும் ஜனநாயக நாட்டில் மற்றவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தை கவர்னர், சபாநாயகர், பா.ஜனதாவினர் தங்கள் சொத்தாக கருதுகின்றனர். இதனால் அத்துமீறி செயல்படுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    போராட்டம் தேவையற்றது அதேநேரத்தில் புதுவையின் அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம். இதனால் மக்களையும், வியாபாரிகளையும், அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பந்த் போராட்டம் தேவையற்றது என கருதுகிறோம்.

    புதுவை மாநிலத்தில் மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளது. அதையெல்லாம் மூடி மறைக்கவும், திசை திருப்பவும் இதுபோன்ற பந்த் போராட்டம் அறிவிக்கப்படுவதாக கருதுகிறோம்.

    எனவே 2 பந்த் போராட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்து முன்னணி போராட்டம் தேவையற்றது. பெரியார் இயக்கங்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு இல்லை. இதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
    • அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையலிட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையலிட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி புதுவையில் உள்ள வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள், பாரதி பூங்காவில் உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள், வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
    • 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலில் உள்ளது.

    இருப்பினும் சிறிய பரப்பிளவிலான புதுவையில் ஹெல்மெட் அணிய நிர்பந்தம் செய்வதில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கவர்னராக இருந்த கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். இதனால் மோதல் நிலவியது.

    இதற்கிடையே இந்தியா முழுவதும் கார்களில் பின் சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சட்டம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் புதுவை காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணிப்போர் சீட் பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    மேலும் இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் குறைந்த வயதுடையவர்கள் அதிகளவில் வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில் இறந்துள்ளனர். இதில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளனர்.

    இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது பெற்றோர் ஹெல்மெட் அணியும்படியும் புதுவை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதலில் காவல்துறையில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் புதுவை மாநில மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதற்காக அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

    இதற்கான உத்தரவுகள் விரைவில் துறைவாரியாக வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து புதுவை மக்களிடையே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    • மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

    இந்த சந்தையில் மாடுகள் மட்டுமின்றி விவசாயி விலை பொருட்கள், காய்கறி, பழ வகைகள் மற்றும் கருவாடு வகைகள் விற்பனை செய்யப்படுகிறன்றன. இதனை வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.

    இதற்கிடையே அங்கு வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வருபவர்களை வாடிக்கையாளர்களாக்கி 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருபுவனை குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது ஒருவர் லாட்டரி சீட்டு முடிவுகளை செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கலிதீர்த்தாள்குப்பம் சுகுமார் நகரை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(வயது50) என்பதும், இவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பணம் ரூ.7 ஆயிரத்து 700 மற்றும் செல்போன், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×