search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பந்த் போராட்டங்கள் தேவையற்றது
    X

    மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பந்த் போராட்டங்கள் தேவையற்றது

    • புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பாளர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தற்போதைய புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் தி.மு.க. அமைப்பாளர் சிவா கூறியதாவது:-

    மனு தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியுள்ளது என 50, 60 ஆண்டுகளாக பேசி வருகின்றனர். தபாலை எழுதியவர் மீது கோபப்படாமல், தபாலை படித்தவர் மீது கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

    அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை கூற உரிமையில்லை. அந்த கருத்தை எதிர்க்கவும், கண்டிக்கவும் ஜனநாயக நாட்டில் மற்றவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தை கவர்னர், சபாநாயகர், பா.ஜனதாவினர் தங்கள் சொத்தாக கருதுகின்றனர். இதனால் அத்துமீறி செயல்படுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    போராட்டம் தேவையற்றது அதேநேரத்தில் புதுவையின் அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம். இதனால் மக்களையும், வியாபாரிகளையும், அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பந்த் போராட்டம் தேவையற்றது என கருதுகிறோம்.

    புதுவை மாநிலத்தில் மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளது. அதையெல்லாம் மூடி மறைக்கவும், திசை திருப்பவும் இதுபோன்ற பந்த் போராட்டம் அறிவிக்கப்படுவதாக கருதுகிறோம்.

    எனவே 2 பந்த் போராட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்து முன்னணி போராட்டம் தேவையற்றது. பெரியார் இயக்கங்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு இல்லை. இதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×