search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரியாங்குப்பத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி
    X

    கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சீருடை மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ கைப்பந்து கழக நிர்வாகிகளிடம் வழங்கிய காட்சி.

    அரியாங்குப்பத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி

    • புதுவை பாரதிதாசன் கைப்பந்து கழகம் சார்பில் தெற்கு மண்டல சுழற்கோப்பைக்கான 43-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி தொடங்கிய 3 நாட்கள் அரியாங்குப்பம் பாரதிதாசன் திடலில் நடைபெற உள்ளது.
    • ஆண்கள் பிரிவில் 3-ம் இடமும் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடமும் பிடிக்கும் அணிகளுக்கான பரிசு தொகையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் கைப்பந்து கழகம் சார்பில் தெற்கு மண்டல சுழற்கோப்பைக்கான 43-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி தொடங்கிய 3 நாட்கள் அரியாங்குப்பம் பாரதிதாசன் திடலில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றன.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.60 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.45 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது. சபணகள் பிரிவில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும். ஆண்கள் பிரிவில் 3-ம் இடமும் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடமும் பிடிக்கும் அணிகளுக்கான பரிசு தொகையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    அதற்கான காசோலையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, பாரதிதாசன் கைப்பந்து கழகத்திடம் வழங்கினார்.

    இதில் துணை நிறுவனர் பெருமாள், பொருளாளர் ராஜாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் புதுவை சேர்ந்த அணிகளுக்கான சீருடை, உபகரணங்களை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வழங்கியது.

    Next Story
    ×