என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் 7-வது நாளாக போராட்டம்
    X

    குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் 7-வது நாளாக இன்று காலி சிலிண்டர்- பாத்திரங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் 7-வது நாளாக போராட்டம்

    • புதுவை குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்.
    • போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். நிரந்தர சம்பளத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    7-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் உணவு செய்ய இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் காலி சிலிண்டர், காலி பாத்திரங்களுடன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளனம் ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×