search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சபாநாயகர் அதிகார எல்லையை மீறுகிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    சபாநாயகர் அதிகார எல்லையை மீறுகிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் மீது புகார் செய்துள்ளனர்.
    • எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை?

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்துகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினர். இதில் தொகுதி வளர்ச்சி பணிகள் நடை பெறவில்லை எனவும், பா.ஜனதா

    எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் மீது புகார் செய்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை? தெம்பும், திராணியும் இருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து வெளியேற வேண்டியதுதானே? பா.ஜனதாவினர் சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது. இது பா.ஜனதாவின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.

    பா.ஜனதா, இந்து முன்னணி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவ ணன்குமார் காரைக்காலுக்கு சென்றபோது தகுதியில்லாத, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள 200 பேருக்கு சிகப்பு ரேஷன்கார்டை வழங்கியுள்ளார்.

    ஆனால் ஆயிரக்க ணக்கான ரேஷன்கார்டு மாற்றக்கோரும் விண்ண ப்பங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறையில் தூங்குகிறது.

    தகுதியில்லாதவர்களுக்கு வழங்கியதை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மீது பா.ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர். அதி காரிகளை ஆர்.எஸ்.எஸ்.

    நிர்வாகிகள் மிரட்டு கின்றனர். இதற்கு காரணம் ரவுடிகளும், கொலையாளிகளும் பா.ஜனதாவில் சேர்ந்தி

    ருப்பதுதான். கட்சிமாறி களுக்குத்தான் பா.ஜனதா

    வில் பதவி வழங்கப் பட்டுள்ளது. உண்மையாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அனுமதி பெற்று நடத்திய போராட்டத்தில் திடீரென இந்து முன்னணியினர் நுழைந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ேபாலீசாரிடம் எப்படி போராட்டத்துக்கு அனுமதியளித்தீர்கள்? என கேட்டு மிரட்டுகிறார். சபாநாயகர் நடுநிலை வகிக்க வேண்டும்.

    அரசியல் செய்ய விரும்பினால் பதவி விலகி அரசியலுக்கு வரவேண்டும். அவர் தொடர்ந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும்.

    வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்ட உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீரை காய்ச்சிக்குடிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

    இதுவரை கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவில்லை. கவர்னர் நடமாடும் மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கை குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆஸ்பத்திரி

    களில் நிற்பது வேதனைய ளிக்கிறது. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    தாய்லாந்து, மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு

    நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுற வுத்துறை மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன். பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த காங்கிரசாரின் கருத்து. இதை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×