என் மலர்
புதுச்சேரி
- மாநில அளவிலான கிக் பாக்சிங் மற்றும் கராத்தே பயிற்சி முகாம் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ் திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றன.
- பயிற்சி பெற்ற அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி:
உலக அளவிலான தற்காப்பு கலை தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கிக் பாக்சிங் மற்றும் கராத்தே பயிற்சி முகாம் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ் திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றன.
பயிற்சி பெற்ற அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. கருப்பு பெல்ட் மற்றும் கலர் பெல்ட் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த பயிற்சி முகாமிற்கு கராத்தே சங்கத்தின் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அமிர்தராஜ், கிருஷ்ணராஜ், அய்யனார், பிரவீன்குமார், எல்லப்பன், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய நடுவர்களான அபிலாஷ், செபஸ்தியர், ராகுல், சந்தோஷ், முகேஷ் லிங்கம், மோகன் சந்துரு, அன்புமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
- விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது.
- மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது.
இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த நீதிமன்றம் முதல்கட்டமாக ஓராண்டுக்கு தனி கட்டிடம் இன்றி, தற்போதுள்ள வளாகத்திலேயே தனியாக செயல்படும். இதற்கு ஒரு நீதிபதி, 7 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நீதிமன்றத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் தனித்துவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் விரைவாக அறிவிக்கப்படும்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.
- சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியை, சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.
சங்கச் செயலாளர் தயாநிதி, துணை செயலாளர் பாலாஜி வரவேற்றனர். ஆரம்ப நிலை, சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாணவ-மாணவிகள் யோகாசனப் போட்டியில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், இந்திய விளையாட்டு பள்ளி பொறுப்பாளர் விட்டல் குமார், புதுவை ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் தனசேகர், டாக்டர் மதன்மோகன், ஞானதேவ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
யோகா வல்லுனர்களுக்கு விருது, நடுவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் தேவசேனா பவனானி, மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், உறுப்பினர் செந்தில்குமார், அன்பழகன், லலிதா, சண்முகம் வாழ்த்தி பேசினார். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.
- புதுவை அகாடமி ஆப் பிளாக் செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக் செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அகாடமி ஆப் பிளாக் செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக் செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை வழங்கினார்.
இதில் 1200-க்கும் மேற்பட்ட குழு அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டது. இறுதிப்போட்டி கடந்த 14-ந் தேதி சென்னையில் நடைபெற்றது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் ஸ்ரீஅரோபிந்ராம், விக்னேஷ், வைத்திலிங்கம், பாலாஜி, லோகேஷ்வர்மன் ஆகியோர் சமர்ப்பித்த மென்பொருள் ஆய்வறிக்கை முதலிடம் பெற்றது. பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் மற்றும் துபாயில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பரிசு வென்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.
மேலும், கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ராஜு, துறையின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- தீபமணி துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
- சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். அவரது மனைவி காத்தம்மாள். இந்த தம்பதியினர் காரைக்கல் கலெக்டர் முகம்மது மன்சூரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
எங்களது மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் என்ஜினியர் படிப்பை முடித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக துபாய்க்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார்.
அதன்பின்னர், துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவருடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். அங்கு படிப்புக்குரிய வேலை கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பான வேலையை கொடுத்து உள்ளனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் ரூ. 49 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
மேலும் துப்பாக்கி முனையில், அடித்து, உதைத்து அதிக நேரம் கடுமையான வேலை வாங்கி சித்ரவதை செய்து உள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.
எனவே மியான்மர் நாட்டில் தவிக்கும் எங்களது மகனை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட வம்பாகீரப்பாளையம் பழைய பாலத்தில் மேலிருந்து இருபுறங்களிலும் போக்கஸ் மின் விளக்குகளை அரசு அதிகாரிகள் அகற்றி விட்டனர்.
- இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட வம்பாகீரப்பாளையம் பழைய பாலத்தில் மேலிருந்து இருபுறங்களிலும் போக்கஸ் மின் விளக்குகளை அரசு அதிகாரிகள் அகற்றி விட்டனர்.
இதனால் மீனவர்கள் தொழில் செய்ய கடலுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. துறைமுக உதவி பொறியாளர் விஜயகுமாரிடம் மீனவ மக்களை அழைத்துச் சென்று கோரிக்கையை தெரிவித்தார்.
அதற்கு அதிகாரிகள் கூறும்போது மீனவ தொழிலாளர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் போது மழைக்காலங்களில் மீண்டும் பாலம் இடிந்து ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அப்போது ஏற்படும் மின் வெட்டினால் உயிர் போகும் அபாயம் உள்ளது.
உடைந்த பாலத்தில் மின் இணைப்பு இருக்க அனுமதி இல்லை. எனவே, தான் மின் விளக்குகளை அப்புறப்படுத்தினோம் என்றனர். அதற்கு எம்.எல்.ஏ. கூறும் போது, மின் சாரம் பாயா தவாறு நவீன அம்சங்கள் கொண்ட மின் இணைப்பு விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றார்.
எம்.எல்.ஏ.வின் கோரி க்கையை ஏற்று, செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அப்போது காலப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசீர், மோரிஸ் மற்றும் மீனவ மக்கள் உடனிருந்தனர்.
- 12-ம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடார் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
காமராஜரின் பிறந்தநாளையொட்டி நாடார் சங்கத்தின் சார்பில் 2021-22ம் ஆண்டு கல்வி ஆண்டில் 10 மற்றும்
12-ம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடார் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுவை நாடார் உறவின் முறை ச்சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல் நாடார் வரவேற்றார். செயலாளர் மாரிமுத்து நாடார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., நாடார் சங்க அவைத்தலைவர் ராமபாண்டிய நாடார், துணை தலைவர்கள் ஆனந்த முருகேசன் நாடார், தங்கமணி நாடார், பால்ராஜ் நாடார், மகராஜா நாடார், தாமோதரன் நாடார், நித்தியானந்தம் நாடார் மற்றும் நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர்.
- மங்கலம் தொகுதி ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், பொன்செல்வரங்கன் நகர், ராஜா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
- இப்பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதி ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், பொன்செல்வரங்கன் நகர், ராஜா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
இப்பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியளார் ரங்கமன்னார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ரதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும்அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் உரசி சென்ற தகராறில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
- வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ஆகாசை கையில் வெட்டினார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் உரசி சென்ற தகராறில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லெனின் நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஆகாஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் உரசி சென்றதாக கூறபடுகிறது. இதனை ஆகாஷ் தட்டிக்கேட்டார்.
இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ஆகாசை கையில் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆகாசை வீச்சரிவாளால் வெட்டிய வாலிபர் லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரை சேர்ந்த ரவுடி அசோக் என்ற செங்கோட்டையன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அசோக் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பட்டியல் அணி சார்பில் பாரத பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு பஸ்த்தி சம்பார்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
- டெல்லியில் இந்த நிகழ்ச்சியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பட்டியல் அணி தேசிய தலைவர் லால் சிங் ஆர்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பட்டியல் அணி சார்பில் பாரத பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு பஸ்த்தி சம்பார்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
டெல்லியில் இந்த நிகழ்ச்சியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பட்டியல் அணி தேசிய தலைவர் லால் சிங் ஆர்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த தொடக்க நிகழ்ச்சி அனைத்து மாநிலங்களிலும் பட்டியலின மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் நெட்டப்பாக்கம் தொகுதி ஏரிப்பாக்கம் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் தொலைக்காட்சி மூலம் அப்பகுதி மக்கள் நிகழ்ச்சியை காணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பட்டியல் அணி தலைவர் தமிழ் மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பட்டியல் அணியின் மாநிலத் தலைவர் தமிழ்மாறன் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடையே நடை முறைப் படுத்தப்பட்டுள்ளதா? எந்தெந்த திட்டங்கள் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது. என்பதை பற்றி மக்களிடையே கருத்துக்களை கேட்டார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் துரைராஜ், பட்டியல் அணி மாநில துணைத் தலைவர்கள் எஸ்.கே. கஜேந்திரன், ராஜேஸ்வரி, பொதுச் செயலாளர் நாகராஜ், மாநில செயலாளர்கள் பிரகாஷ், வீரப்பன், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன், புதுவை நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, கலைமாமணி, தட்சிணாமூர்த்தி , சிறப்பு அழைப்பாளர்கள் கார்த்திகேயன், சரவணன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டியல் அணியின் நெட்டப்பாக்கம் தொகுதி தலைவர் அன்பழகன் செய்திருந்தார்.
- புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவரும், 3 ஆயிரத்து 570 கி.மீ. பாத யாத்திரையை கன்னியகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டு வரும் இளம் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஹிபி ஈடன் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






