என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern electric lights"

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட வம்பாகீரப்பாளையம் பழைய பாலத்தில் மேலிருந்து இருபுறங்களிலும் போக்கஸ் மின் விளக்குகளை அரசு அதிகாரிகள் அகற்றி விட்டனர்.
    • இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட வம்பாகீரப்பாளையம் பழைய பாலத்தில் மேலிருந்து இருபுறங்களிலும் போக்கஸ் மின் விளக்குகளை அரசு அதிகாரிகள் அகற்றி விட்டனர்.

    இதனால் மீனவர்கள் தொழில் செய்ய கடலுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. துறைமுக உதவி பொறியாளர் விஜயகுமாரிடம் மீனவ மக்களை அழைத்துச் சென்று கோரிக்கையை தெரிவித்தார்.

    அதற்கு அதிகாரிகள் கூறும்போது மீனவ தொழிலாளர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் போது மழைக்காலங்களில் மீண்டும் பாலம் இடிந்து ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அப்போது ஏற்படும் மின் வெட்டினால் உயிர் போகும் அபாயம் உள்ளது.

    உடைந்த பாலத்தில் மின் இணைப்பு இருக்க அனுமதி இல்லை. எனவே, தான் மின் விளக்குகளை அப்புறப்படுத்தினோம் என்றனர். அதற்கு எம்.எல்.ஏ. கூறும் போது, மின் சாரம் பாயா தவாறு நவீன அம்சங்கள் கொண்ட மின் இணைப்பு விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றார்.

    எம்.எல்.ஏ.வின் கோரி க்கையை ஏற்று, செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அப்போது காலப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசீர், மோரிஸ் மற்றும் மீனவ மக்கள் உடனிருந்தனர்.

    ×