என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு துரை. ஜானகிராமன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக தமிழ்மணியும், செயலாளராக அசாருதீனும், பொருளாளராக இளங்கோ–வனும் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பதவியில் அமர வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

    சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், நாகலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    விழாவில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சால்வை அணிவித்து பாராட்டி பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு புடவை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    லயன்ஸ் சங்க நிர்வாகி பரந்தாமன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து திருக்கனூர் கடைவீதி மற்றும் உட்புற தெருக்களில் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள் டிஜிட்டல் பெயர் பலகைகளை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.

    இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் வீரராகவன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.

    பள்ளி மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளிடையே ஏற்படும் இந்த காய்ச்சல் பெரியவர்களுக்கும் பரவுகிறது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    மேலும் முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுவையில் நேற்று 270 சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவசர சிகிச்சையில் 410 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இதேபோல் காரைக்காலில் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சைக்கு 15 சிறுவர்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அவசர சிகிச்சையில் 10 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மொத்தமாக புதுவை, காரைக்காலில் 705 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் புதுவையில் 42 பேரும், காரைக்காலில் 8 பேரும் என மொத்தம் 50 குழந்தைகள் மருத்துவனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது புதுவையில் 155 சிறுவர்களும், காரைக்காலில் 12 சிறுவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
    • காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    அதில் விடுபட்ட காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அத்துடன் நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் கொண்டு வர கோரிக்கைகள் எழுந்தன.தமிழகத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த தருணத்தில் அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அங்கீகரிக்க புதுவை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக புதுவை அரசு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.
    • புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழியற்புல முதன்மையர் சந்திரிகா, பேராசிரியர்கள் கருணாநிதி, ரவிக்குமார், பழனிவேலு,.தனலட்சுமி, சிலம்பு நா. செல்வராசு, பக்தவத்சல பாரதி, சம்பத், வெங்கட சுப்புராய நாயகர், எழுத்தாளர்கள் சீனு.தமிழ்மணி, புதுவை இளவேனில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார். கி.ராஜநாராயணனின் நினைவுகளைப் பேராசிரியர், பக்தவத்சல பாரதி, இரா.சம்பத், பழனிவேலு, சீனு.தமிழ்மணி உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியர் ரவிக்குமார் ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியை பட்ட ஆய்வாளர் யூசுப் ஷெரிப் தொகுத்து வழங்கினார்.

    • இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டுப் பிரிவின் மாநில தலைவர் டாக்டர் பழனிச்சாமி செயலாளர் டாக்டர் தியாகராஜன், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் ரவிக்குமார், கடலூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியன் மற்றும் டாக்டர்கள் முகுந்தன், ராஜேந்திரன், சந்திரன், கேசவன், கோவிந்தராஜி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர், ஸ்ரீ கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி புதுவை சேர்மனுமான செல்வமணி பேராசிரியர்கள் சிவ சுப்பிரமணியன், பிரமானந் மொகந்தி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஜவுளி கடை உரிமையாளர் அனுப்மெல்வானி, ஏ.வி.எம் கட்டிட காண்டிராக்டர் விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.
    • ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

    இந்த சாதனை 'வெர்ச்சூ' புத்தகத்தில் இடம் பிடித்தது. இதன் ெதாடர்ச்சியாக புதுவை காலாப்பட்டு கீழ்புத்துப்பட்டு வனப்பகுதி, ஏரிக்கரை, தோப்புகள் தரிசு நிலங்களில்

    என்.எஸ்.எஸ். குழுவினர் உருவாக்கிய விதைபந்துகள் தூவப்பட்டன. இதில் சி்றப்பு விருந்தினராக தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டசேன் நிறுவன இயக்குனர் பூபேஷ் குப்தா கலந்து கொண்டு மாணவர்களின் சுற்றுச்

    சூழல் ஆர்வத்தை பாராட்டினார். ேமலும் அவர், ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

    முன்னதாக பள்ளியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டேவிட் செயிண்ட் ஆண்டனி வரவேற்றார். முடிவில் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    • பூமியான்பேட்டையில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை அன்னை அப்பார்ட்மெண்ட் எதிரே வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோராஜ் (வயது40). இவரது மனைவி ஜெனிஷா(38). கணவன்-மனைவி இருவரும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெனிஷா தன்னுடைய நகைகளை பாதுகாப்பாக வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழே ஒரு பாலித்தீன் பையில் வைத்து செல்வது வழக்கம். விசேஷத்துக்கு மட்டும் அந்த நகைகளை அணிந்து செல்வார்.

    இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் குளியல் அறை மற்றும் கழிவறையை பழுது பார்த்து பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கு ஜெனிஷா சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த 1½ மாதங்களாக வீட்டின் கட்டுமான வேலைகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெனிஷா கட்டிலின் கீழே வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 40 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கம்பெனியில் பணியாற்றும் வட மாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் கஞ்சாவை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேதராப்பட்டு மற்றும் துத்திப்பட்டு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பெரும்பாலும் இந்த தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கம்பெனியில் பணியாற்றும் வட மாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் கஞ்சாவை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் சேதராப்பட்டு மும்மூனை சந்திப்பில் வட மாநில இளைஞர்கள் கும்பலாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2 பேர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர்.

    அவர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணதாஸ் மகன் த்ரிலோசன் தாஸ், சுஜாதாஸ் மகன் சுரேஷ் தாஸ் ஆகிய 2 பேரும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திரிலோசன்தாஸ் கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்திலிருந்து சேதராப்பட்டு வரும் பொழுது அந்தப் பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சேதராப்பட்டை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 230 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ரூ. 6 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
    • புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது.

    புதுச்சேரி:

    புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பண்டிகைக்காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவை திருமண மண்டபங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நபர்களால் புதுவை மக்களை நம்பி ஆண்டுமுழுதும் வியாபாரம் செய்யும் புதுவை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    இதனால் புதுவை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து, புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது. பண்டிகைகாலங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் கடைவிரிக்கும் நிறுவனங்கள் தனிநபர்களின் துணிவகைகள் மற்றும் இதரபொருட்கள் பகட்டாக இருந்தாலும், பொருட்களின் தரம் மலிவானதாக உள்ளது.

    பயன்படுத்திய சில நாட்களிலேயே அவற்றின் சாயம் வெளுக்கும்போது, முறையிட அவர்களின் கடை இருப்பதில்லை. வெகுசில நாட்களில் அவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிடுகின்றனர். இதனால் நமது மாநில மக்கள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இழந்து, ஏமாற்றமடைந்து நிற்கும் நிலை ஆண்டுதோறும் தொடர்கதையாகி வருகிறது.

    எனவே ஆண்டு முழுவதும் புதுவை மக்களை நம்பி புதுவை மக்களால் வணிகம் செய்துவரும் வியாபாரி களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிமாநில வியாபாரி களுக்கு தடைவிதித்து புதுவை வியாபாரிகளின் வாழ்வாதாரம் சிறக்க உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறினார்.

    • காரைக்காலில் துாய்மை பணி,ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.
    • காரைக்கால் கடற்கரை மற்றும் கிளிஞ்சல் மேடு கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் துாய்மை பணி,ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம்,தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், புவி அறிவியல் அமைச்சகம்,இந்திய கடலோர காவல் படை சார்பில் காரைக்காலில் கடற்கரை துாய்மை பணி நடந்தது.

    செல்வகணபதி எம்.பி.,சிறப்புரையாற்றி கடற்கரை துாய்மை பணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து காரைக்கால் கடற்கரை மற்றும் கிளிஞ்சல் மேடு கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.காரைக்கால் மாவட்ட நிர்வாகம், கடலோர காவல் படை, என்.சி.சி.,மற்றும் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள், காரைக்கால் நகராட்சி நிர்வாகம், காவல்துறை, ஓ.என்.ஜி.சி., தன்னார்வலர்கள் கடற்கரையில் பரவி கிடந்த குப்பை,பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.துாய்மை பணியில் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் கலந்து கொண்டு,குப்பைகளை சேகரித்தனர்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், கடலோர காவல்படை கமாண்டன்ட் விவேகானந்தன், பேரிடர் மேலாண்மை துணை கலெக்டர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தன்னார்வல ரத்த தான முகாம் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் நடந்தது.காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவமனை மற்றும் பா.ஜனதா சார்பில் நடந்த ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.மருத்துவமனை டாக்டர்கள்,செவிலியர்கள், பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இக்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஊட்டச்சத்து மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய தேசிய அளவிலான பிரசாரம் நடந்தது.
    • குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய மகளிர் அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் பழமரக்கன்றுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) அறிவுறுத்தலின்படி காமராசர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இக்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஊட்டச்சத்து மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய தேசிய அளவிலான பிரசாரம் நடந்தது. வேளாண் இயக்குநர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி வாழ்த்துரை வழங்கினார்.

    வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய மகளிர் அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் பழமரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் நடும் விழாவினை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்தார்.

    ஊட்டச்சத்து தானியங்கள் பற்றிய விரிவுரை மற்றும் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி ஜிப்மர் உணவியல் நிபுணர் மாதவி எடுத்துரைத்தார். நிலைய விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தில் தோட்டத்தின் பங்கு குறித்து உழவியல் நிபுணர் ரவி எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் மற்றும் அதனை பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், விவசாய நண்பர்கள் மற்றும் விவசாய மகளிர் கலந்து கொண்டனர். தொழில் நுட்ப வல்லுனர் பொம்மி நன்றி கூறினார்.

    • நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
    • தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது:-

    நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

    இந்தியாவை கட்டமைப்பதில் உலகளவில் சிறந்த தலைவராக திகழ்வதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மாநில மக்கள் சார்பிலும், எனது சார்பிலும், நல் ஆரோக்கியத்தோடு, நல் உடல்நலத்தோடு நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இறைவன் அருள்புரியட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×