என் மலர்
புதுச்சேரி
- கூடைப்பந்து போட்டியை புதுவை உப்பளத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
- இறுதி போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின.
புதுச்சேரி:
இந்திய கூடைப்பந்து கழகமும், புதுவை கூடைப்பந்து கழகமும் இணைந்து, தென்னந்திய தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியை புதுவை உப்பளத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த போட்டியில் 83-67 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 5 லீக் போட்டியிலும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 2-வது இடத்தை கேரளாவும், 3-வது இடத்தை தெலுங்கானா அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் கேரளா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை தமிழ்நாடும், 3-வது இடத்தை கர்நாடகாவும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கி பாராட்டினார். இப்போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த அணிகள், வருகிற நவம்பர் மாதம் உதயப்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
- மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், நகர மாவட்ட செயலாளர் விஜய ராஜேஷ், தொகுதி தலைவர்கள் ஹரிதாஸ், நாகராஜ், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் பொதுச் செயலாளர்கள் செந்தில், சத்யா, அரவிந்த் செயலாளர் வாசகி, இளைஞர் அணி தொகுதி தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன், முத்தியால்பேட்டை இளைஞரணி செயலாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.
- ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், நகர செயலாளர்கள், அன்பழக உடையார், சித்தானந்தம் துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசேரன், நாகமணி, குமுதன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- காசநோய் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.
புதுச்சேரி:
காசநோய் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளான புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து காச நோயாளிகளுக்கும் விரைவாக குணமடைய வேண்டி மாதந்தோறும் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, நோடல் அதிகாரி சந்திரசேகர், பொறுப்பாளர்கள் ரத்தினவேலு, ஹேமாமாலினி, ஜெயந்தி, யுவர் பேக்கர்ஸ் நிறுவன பொறுப்பாளர்கள் கிருஷ்ணாராஜ், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வேண்டுகோளை ஏற்று காசநோயாளிகளுக்கு ஒராண்டுக்கு ஊட்ட சத்து வழங்கும் பொறுப்பை யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்தினர் ஏற்றனர்.
- இந்து மதத்தை அவமதித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
இந்து மதத்தை அவமதித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், திருநாவுக்கரசு, ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம், இளங்கோ, நாகமணி, குமுதன், அன்பழக உடையார், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், ராசாவின் உருவ படத்தை கிழித்து அவமதித்தனர்.
அ.தி.மு.க.செயலாளர் அன்பழகன் கூறும்போது,கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ராசா பேசியிருப்பது தி.மு.க.வின் கொள்கையா.? இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
- புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் 200 -க்கு மேற்பட்ட அறிவியல் படைப்பு களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண்காட்சியை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.
பின்னர் இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மாணவர்களின் படைப்புகளை மதிப்பீட்டு, குழு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
- வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது.
- தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் வெளிநாட்டில் உள்ள தொலைக்காட்சி அலுவலகம் ஒன்றில் தொலைபேசி அழைப்பாளர் பணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் பேசினார். அவர் கம்போடியா நாட்டில் வேலை இருப்பதாகவும், அங்கு உங்களை அனுப்பி வைப்பதற்கான ஏஜெண்டுகள் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வேலையில் சேர்த்து விடுவதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் முருகன் கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சென்னை ஏஜெண்டுகள் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
புதுச்சேரி இளம்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.4 லட்சம் கேட்ட கும்பல் இறுதியாக ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. தொலைபேசி அழைப்பாளர் வேலையை வழங்காமல் அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை எடுபிடி வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர்.
நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ரூ.2½ லட்சத்துக்கு உன்னை விலைக்கு வாங்கியுள்ளோம் என்று கம்போடியா கும்பல் கூறியுள்ளது. தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் விபசார கும்பலிடம் விற்று விடுவோம். உன்னை அதிக விலைக்கு வாங்குவதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி கம்போடியா கும்பல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது. இதனை அங்கு பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் பார்த்து இளம்பெண் மீது கருணை காட்டியுள்ளார். பின்னர் அவரது உதவியுடன் புதுவை இளம்பெண் பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
இதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ் குமார் லாலிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி இளம்பெண்ணை முதலியார் பேட்டையை சேர்ந்த வாலிபர் முருகன் மற்றும் சென்னை புரோக்கரான வெளிநாட்டு ஏஜெண்டு ராஜ்குமார் ஆகியோர் திட்டம் போட்டு பணத்துக்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புதுவை வாலிபர் முருகனை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஏஜெண்டு ராஜ் குமாரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மோசடிக்கும்பல் இளம்பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா கும்பலிடம் விற்பனை செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஏஜெண்டை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இளம்பெண்ணை சித்ரவதை செய்த கம்போடியா கும்பல் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை இளம்பெண்ணை டாலர் கணக்கில் கம்போடியா கும்பல் விலை பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதன்படி 3500 டாலர் கொடுத்து கம்போடியா மோசடி கும்பல் இளம்பெண்ணை வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள தமிழகம், புதுவை மோசடி கும்பலையும், கம்போடியா நாட்டை சேர்ந்தவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
கம்போடியாவில் இளம்பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அங்கு உள்ள ஒரு நிறுவன மேலாளர் அட்டிடோ மற்றும் ஜான் ஆகியோர் தான் தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு பதிலாக வேறு வேலை கொடுத்து சித்ரவதை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
- புதுவையில் பள்ளி மாணவனை கடத்தி வந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவன் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான்.
அதுபோல் நேற்று மாலை மாணவன் டியூசன் முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவனை மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பெட்டிக்கடை அருகே வந்த போது மாணவன் சத்தம் போட்டு அழுதான். அப்போது பெட்டிக்கடை உரிமையாளர் சரவணன் அந்த வாலிபரிடம் விசாரித்த போது தனது உறவினர் மகனை அழைத்து வருவதாக கூறினார்.
அதற்கு அந்த சிறுவன் அந்த வாலிபர் எனது உறவினர் இல்லை. என்னை மிரட்டி கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒரு பெண் அந்த சிறுவனை பத்திரமாக தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பூட்டி வைத்துக்கொண்டார்.
இதனால் மாணவனை கடத்தி வந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து சிறுவனை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.
உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனை கடத்தி வந்த வாலிபரையும் மாணவனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மாணவனின் தாய்க்கு தகவல் தெரிவித்து மாணவனை அவரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த அமீது அப்துல் காதர் (வயது 21) என்பதும் இவர் மாணவனின் தாயிடம் பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அமீது அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதுவை எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேரவை அலுவலகத்தில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரவை தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் ரத்தினகுமார், பொருளாளர் ரங்கநாதன், இணைச்செயலாளர் எல்.ஐ.சி. சாம்ராஜ், துணைத்தலைவர்கள் ஜெயராம், பரமேஸ்வரி, துணைசெயலாளர் அனிதா கணேசன், மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.
புதுச்சேரி:
எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் சக்தி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன், பொருளாளர் தாண்டவகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு சேவை அளிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்துக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்.
முகவரின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ குழு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- புதுவை குடிமை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை இன்று தொடங்கினர்.
- அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை குடிமை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்துக்கு சங்கத்தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார்.அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
56 மாத நிலுவை சம்பளம் தர வேண்டும். சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும். மாதந்தோறும் ஊதியம் தரவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.
சம்பவத்தன்று கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
கோவிலில் பூஜை செய்ய வந்த போது உண்டியல் உடைத்துகாணிக்கை பணத்தை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்வாகி வேல்முருகன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






