என் மலர்

  புதுச்சேரி

  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்-ரங்கசாமி வழங்கினார்
  X

  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை முதல்-ரங்கசாமி வழங்கிய காட்சி. 

  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்-ரங்கசாமி வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காசநோய் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.

  புதுச்சேரி:

  காசநோய் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

  அந்த வகையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளான புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து காச நோயாளிகளுக்கும் விரைவாக குணமடைய வேண்டி மாதந்தோறும் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.

  முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.

  நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, நோடல் அதிகாரி சந்திரசேகர், பொறுப்பாளர்கள் ரத்தினவேலு, ஹேமாமாலினி, ஜெயந்தி, யுவர் பேக்கர்ஸ் நிறுவன பொறுப்பாளர்கள் கிருஷ்ணாராஜ், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வேண்டுகோளை ஏற்று காசநோயாளிகளுக்கு ஒராண்டுக்கு ஊட்ட சத்து வழங்கும் பொறுப்பை யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்தினர் ஏற்றனர்.

  Next Story
  ×