என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவையிலும் நரிக்குறவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்
- புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதில் விடுபட்ட காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்துடன் நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் கொண்டு வர கோரிக்கைகள் எழுந்தன.தமிழகத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தருணத்தில் அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அங்கீகரிக்க புதுவை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக புதுவை அரசு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.






