என் மலர்
புதுச்சேரி

நூற்றாண்டு விழா நடைபெற்ற காட்சி.
கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா
- புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.
- புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழியற்புல முதன்மையர் சந்திரிகா, பேராசிரியர்கள் கருணாநிதி, ரவிக்குமார், பழனிவேலு,.தனலட்சுமி, சிலம்பு நா. செல்வராசு, பக்தவத்சல பாரதி, சம்பத், வெங்கட சுப்புராய நாயகர், எழுத்தாளர்கள் சீனு.தமிழ்மணி, புதுவை இளவேனில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார். கி.ராஜநாராயணனின் நினைவுகளைப் பேராசிரியர், பக்தவத்சல பாரதி, இரா.சம்பத், பழனிவேலு, சீனு.தமிழ்மணி உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியர் ரவிக்குமார் ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியை பட்ட ஆய்வாளர் யூசுப் ஷெரிப் தொகுத்து வழங்கினார்.






