என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Level Karate"

    • மாநில அளவிலான கிக் பாக்சிங் மற்றும் கராத்தே பயிற்சி முகாம் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ் திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றன.
    • பயிற்சி பெற்ற அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    உலக அளவிலான தற்காப்பு கலை தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கிக் பாக்சிங் மற்றும் கராத்தே பயிற்சி முகாம் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ் திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றன.

    பயிற்சி பெற்ற அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. கருப்பு பெல்ட் மற்றும் கலர் பெல்ட் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த பயிற்சி முகாமிற்கு கராத்தே சங்கத்தின் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அமிர்தராஜ், கிருஷ்ணராஜ், அய்யனார், பிரவீன்குமார், எல்லப்பன், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய நடுவர்களான அபிலாஷ், செபஸ்தியர், ராகுல், சந்தோஷ், முகேஷ் லிங்கம், மோகன் சந்துரு, அன்புமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    ×